Published:Updated:

`இந்திய வீரர்களால்தான் கபடி உலக அங்கீகாரம் பெற்றிருக்கிறது!' - விராட் கோலி பெருமிதம்

விராட் கோலி
விராட் கோலி ( Twitter )

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக கபடி இன்று திகழ்வதற்கு இந்திய வீரர்களின் ஃபிட்னெஸ் மற்றும் உழைப்பே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார் .

நாடு முழுவதும் புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் தொடக்கவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டார். போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடிய விராட் கோலி, போட்டியை முழுவதும் கண்டுகளித்தார். முதல் போட்டியில் யு மும்பா - பனேரி பல்டான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது.

விராட் கோலி
விராட் கோலி
Twitter

அந்த நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, `புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கப்பட்ட பின்னர் கபடி தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும்போது விளையாடிய ஒரு விளையாட்டு, உலக அளவில் அங்கீகாரம் பெற்று பிரமாண்ட வளர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக உலக அளவில் நமது இந்திய அணி சிறப்பான அணி என்ற தகவல் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

புரோ கபடி லீக் தொடரில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் நமது நாட்டுக்கு வருகிறார்கள். அதன்மூலம், இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

விராட் கோலி
விராட் கோலி
Twitter

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக கபடி மாறியிருப்பதற்கு இந்திய வீரர்களின் ஃபிட்னெஸும் அவர்களின் உழைப்புமே முக்கியக் காரணம்'' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு