Published:Updated:

‘நீங்கள் அழகாக இல்லை!’ - ட்விட்டரில் மாஸ் காட்டிய ஆர்ச்சர்

ராம் பிரசாத்

இங்கிலாந்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரை ஒருவர் யூடியூப் கமென்ட்டில் சீண்டியுள்ளார்.

Archer
Archer

ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர். வெஸ்ட் இண்டீஸ் மண்ணின் மைந்தரான ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார். பார்படாஸில் பிறந்த ஆர்ச்சர், தற்போது வசிப்பது இங்கிலாந்தில். உலகக் கோப்பையில் விளையாடியதன்மூலம் அவரது ரசிகர்கள் பட்டாளம் மேலும் விரிவடைந்துள்ளது. ட்விட்டரில் ஆர்ச்சர் ஆக்டிவ்வான நபர்தான். அவரது வேகமான பந்துவீச்சைப் போல ட்வீட்களும் வேகமெடுக்கும். நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள், அவரது ட்விட்டர் பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும்.

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

கிரிக்கெட்டை தாண்டி, கால்பந்து, வீடியோ கேம்ஸ் போன்றவற்றிலும் அதிகம் ஈடுபாடுகொண்டவர். இந்த நிலையில் ஆர்ச்சர் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். கால்பந்து விளையாடுவது, கிரிக்கெட்டில் தனது மகிழ்வான தருணங்கள், வீடியோ கேம்ஸ் ஆடுவது, இயற்கையுடன் உலாவுவது, கார் பயணங்கள் இதனை எல்லாம் எடிட் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நிறைய பேர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு நிறைய கமென்ட்ஸ் குவிந்தன. அதில் ஒருவர் ஆர்ச்சரைப் பார்த்து, ‘நீங்கள் அழகாக இல்லை’ எனப் பதிவிட்டிருந்தார். அந்த நபர் எதற்காக அப்படி கமென்ட் செய்தார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆர்ச்சர் அடித்த பதில் கமென்ட், அனைவரையும் ரசிக்கவைத்துள்ளது.

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

ஆர்ச்சர் நினைத்திருந்தால் என்ன கமென்ட் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். “ஆனால், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” எனப் பதில் கமென்ட் அடித்து அசரடித்தார். இதனை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். ஆர்ச்சர், உங்கள் அணுகுமுறை பிடித்துள்ளது என நிறைய பேர் அதில் கமென்ட் செய்துள்ளனர்.