Published:Updated:

இந்தியாவுக்கு 2-வது பதக்கம்; துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் விஜய்குமார்!

Vikatan Correspondent
இந்தியாவுக்கு 2-வது பதக்கம்; துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் விஜய்குமார்!
இந்தியாவுக்கு 2-வது பதக்கம்; துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் விஜய்குமார்!

லண்டன்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 25 மீட்டர் ராபிட் ஃபயர் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

34 புள்ளிகள் பெற்ற கியூபா வீரர் புபோ தங்கமும், 30 புள்ளிகள் பெற்ற விஜய்குமார் வெள்ளி பதக்கமும், 27 புள்ளிகள் பெற்ற சீனா வீரர் டிங் வெண்கலம் பதக்கமும் வென்றனர்.

விஜயகுமார் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.

முன்னதாக, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.

வெள்ளி வென்ற விஜய்குமார் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமாரை வாழ்த்துவோம் வாருங்கள்!