Published:Updated:

ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்றது சீனா!

ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்றது சீனா!
ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்றது சீனா!
ஒலிம்பிக்: முதல் தங்கத்தை வென்றது சீனா!

லண்டன்:  லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,இன்று நடைபெற்ற  பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீனா முதல் தங்கத்தை வென்றது.
 
ஒலிம்பிக் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, பெண்கள் 10மீ ஏர் ரைபிள் போட்டி  நடைபெற்றது. தகுதிச் சுற்றில் போலந்து (399), சீனா (399), ரஷியா (398),  சீனா (398), ஈரான் (397), அமெரிக்கா (397 புள்ளிகள்) (6,7), செக் குடியரசு  (397) நாட்டு வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது.இப்போட்டியில்  சீனாவின் யி சில்லிங் 502.9 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.

##~~##
இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவே முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்லிங்கை தொடர்ந்து போலந்து வீராங்கனை சில்வியா 502.2 புள்ளிகள் பெற்று  வெள்ளி பதக்கத்தையும், சீனா வீராங்கனை யூ டான் 501.5 புள்ளிகள் பெற்று  வெண்கலம் பதக்கத்தையும் வென்றனர்.