Published:Updated:

இந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..!
இந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..!

இந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவை முதலிடம் பிடிக்கச் செய்த இந்திய தடகள வீரர்களுக்கு வீரேந்தர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 46 வீராங்கனைகள், 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர். இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி மற்றும் 12  வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது. இதுவே, இந்தியாவின் சிறந்த பதக்கப்பட்டியல் ஆகும்.

இதையடுத்து இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக், 'இந்தியாவை புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கச் செய்த, இந்திய தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். மிகவும் பெருமையாக உள்ளது' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா, தடகளத்தில் எப்போதும் அசத்தி வரும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. சீனா 20 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கஜகஸ்தான் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு