Published:Updated:

ஒலிம்பிக் தடகளம்: ராம் சிங் யாதவ், ரஞ்சித் மஹேஸ்வரி, மயோகா ஜானி தகுதி!

Vikatan Correspondent
ஒலிம்பிக் தடகளம்: ராம் சிங் யாதவ், ரஞ்சித் மஹேஸ்வரி, மயோகா ஜானி தகுதி!
ஒலிம்பிக் தடகளம்: ராம் சிங் யாதவ், ரஞ்சித் மஹேஸ்வரி, மயோகா ஜானி தகுதி!
ஒலிம்பிக் தடகளம்: ராம் சிங் யாதவ், ரஞ்சித் மஹேஸ்வரி, மயோகா ஜானி தகுதி!

புதுடெல்லி: ஒலிம்பிக் தடகளத்தில் பங்கேற்க, இந்திய தடகள வீரர்களான ராம் சிங் யாதவ், ரஞ்சித் மஹேஸ்வரி, மயோகா ஜானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

124 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க வீரர்கள் இல்லாமல் சர்வதேச அளவில் இந்தியா தலைகுனிவுக்கு ஆளான நிலையில், தற்போது 3 தடகள வீரர்கள் ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் விளையாட இந்தியாவின் ராம் சிங் யாதவ் (10 கி.மி., ஓட்டம்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள் ஜம்ப்), மயோகா ஜானி (டிரிபிள் ஜம்ப்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் நீண்ட நாட்களாக போட்டியில் பங்கேற்காததால், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என இந்திய தடகள கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது.

இதன்மூலம் ரஞ்சித் மகேஸ்வரி, மயோகா ராணி ஆகியோர் தங்களது உடற்தகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரூபித்தனர். இந்நிலையில் கோயம்பத்தூரில் நடந்த ’சிந்தடிக் டிராக்' போட்டியில் பங்கேற்ற ராம் சிங் யாதவ், பந்தய தூரத்தை 32 நிமிடம் 30 வினாடிகளில் கடந்து பதக்கம் வென்றார். இதன்மூலம் இவர் உடற்தகுதியை நிரூபித்து, லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதுகுறித்து இந்திய தடகள கூட்டமைப்பு செயலாளர் சி.கே. வால்சன் கூறுகையில், ’’கோவையில் நடந்த தடகளப் போட்டியின் மூலம், ராம் சிங் யாதவ் உடற்தகுதியை நிரூபித்தார். இவரது உடற்தகுதி திருப்தி அளிப்பதால், இவரை லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட அனுமதி அளிக்கிறோம்,'', என்றார்.

இவர்களை தவிர 2010-ல் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்க வென்ற இந்திய அணி பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இதில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகளான அஸ்வினி, சினிஜோஸ் மன்தீப் கவூர் ஆகியோர் போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது 2 ஆண்டு தடை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.