Published:Updated:

Athletics: ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்கள் வென்று அசத்தும் 82 வயது முன்னாள் எம்.எல்.ஏ!

Atheletics | எம்.ஜெ.ஜேக்கப்

"ஸகாவே, வயது என்பது வெறும் நம்பர்தான் என எல்லோரும் சொல்வதுண்டு. அதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்" என கல்வி அமைச்சர் சிவன்குட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வைப் பாராட்டியுள்ளார்.

Athletics: ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்கள் வென்று அசத்தும் 82 வயது முன்னாள் எம்.எல்.ஏ!

"ஸகாவே, வயது என்பது வெறும் நம்பர்தான் என எல்லோரும் சொல்வதுண்டு. அதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்" என கல்வி அமைச்சர் சிவன்குட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வைப் பாராட்டியுள்ளார்.

Published:Updated:
Atheletics | எம்.ஜெ.ஜேக்கப்
கேரள மாநிலம் 'பிறவம்' சட்டமன்றத் தொகுதியில் 2006-ம் ஆண்டு சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எம்.ஜெ.ஜேக்கப். அதற்கு முன்பு திருமாராடி பஞ்சாயத்து தலைவராக இரண்டுமுறை இருந்து சிறந்த பஞ்சாயத்துக்கான விருதையும் வென்றுள்ளார் அவர்.

எம்.ஜெ.ஜேக்கப்புக்கு தற்போது வயது 82. எம்.ஏ, பி.எல் படித்துள்ள ஜேக்கப் இன்னும் அரசியலில் இருந்து மக்கள் சேவை செய்து வருகிறார். அதே நேரத்தில் அத்லெடிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவர் ரத்தத்தோடு கலந்துள்ளது. கல்லூரி படிக்கும் காலங்களில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பலவற்றிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆசியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் ஆசியா போட்டிகளிலும். ஆஸ்திரேலியா, பிரான்ஸ் , ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

82 வயதில் சாதனை படைத்த முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜெ.ஜேம்ஸ்
82 வயதில் சாதனை படைத்த முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜெ.ஜேம்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் கடந்த மாதம் பின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டிருக்கிறார் 80 வயதான எம்.ஜெ.ஜேக்கப்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கே 200 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் . இவ்வெற்றிக்கு கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அவருக்கு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜெ.ஜேம்ஸ்
முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜெ.ஜேம்ஸ்

அவ்வாழ்த்து செய்தியில், " ஸகாவே, வயது என்பது வெறும் நம்பர்தான் என எல்லோரும் சொல்வதுண்டு. அதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். பிறவம் முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜெ.ஜேக்கப் பின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். 200 மீட்டர், 800 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார். எம்.ஜெ. ஜேக்கப் நமது பெருமை " என அவர் குறிப்பிட்டுள்ளார்.