
உலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் ஹரிகா
மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஈரானில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலியிறுதியில் அவர் ஜார்ஜியாவின் நானா டாக்னிஜாவை வீழ்த்தினார். இதையடுத்து, அரையிறுதியில் அவர் சீனாவின் Tan Zhongyi உடன் மோத உள்ளார்.

ஹரிகா, உலக செஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறுவது இது மூன்றாவது முறை. இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஹரிகா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெறும் பட்சத்தில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும், முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.