Published:Updated:

சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak

சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak
சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல்.


சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட் செய்தோம்.தோனியிடம் நான் முதலில் பவுல் செய்கிறேன் என்றேன். " என்றார். 


 2007-ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலக கோப்பையில் பலத்த அடி வாங்கி இந்தியா திரும்ப , செப்டம்பரில் நடந்த டி20 கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை அனுப்ப முடிவு செய்தனர்.அதைவிடவும், முன்னணி வீரர்கள் ஒதுங்கிக் கொண்டனர் என்பதே உண்மை.கேப்டனாக இளம் வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டார்.அணியில் ஹர்பஜன், சேவக், அஜித் அகர்கர் தவிர அனைவருமே, தோனியை விடவும் இளையவர்கள்.


ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியை மழை எடுத்துக்கொண்டு செல்ல, அடுத்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது, தோனியின் இந்திய அணி. 
கவுதம் கம்பீர் (0),சேவக் (5) என ஆரம்பமே அடி விழுந்தாலும், ராபின் உத்தப்பாவின் (50) இந்தியாவைக் காப்பாற்றி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுக்க வைத்தது. 
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் எடுக்க தேவைப்பட்டது.எப்படியும் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் போட்டியைப் பார்க்க, அஜித் அகர்கர் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட்டு 17 ரன்கள் எடுக்கப்பட்டது.


கடைசி ஓவர் 12 ரன்கள் அடித்தால், பாகிஸ்தான் வெற்றி.மிஸ்பா 43 ரன்களுடன் களத்தில் இருந்தார். 4 பந்துகளில் 11 ரன்களை எடுத்துவிட்டது பாகிஸ்தான்.  இனி இருக்கும் 2 பந்துகளில் பாகிஸ்தானுக்கு தேவை ஒரு ரன் மட்டுமே. ஆனால் ஃபினிஷ்வர் மிஸ்பா உல் ஹக் திணற , மேட்ச்  ட்ரா ஆனது. அப்பாடா என உட்கார்ந்தால், பவுல் அவுட் Bowl out என அறிவிக்கப்பட்டது. 

இது என்னடா புது உருட்டு என கூகிளில் அதன் விதிமுறைகளை தேடிக்கொண்டு இருந்தனர் ரசிகர்கள். பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று(இதுக்கு ஒரு டாஸா), இந்தியாவை முதலில் பவுல் அவுட் செய்ய அழைத்தார். இந்தியா சார்பில் சேவக், உத்தப்பா,ஸ்ரீசாந்த்,பதான்,ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சேவக் முதலில் பந்து வீச, அட வீடியோவ பாருங்க ப்ரோ.