Published:Updated:

தோனி Vs பிராத்வயிட். அமெரிக்காவில் அதிரடி கிரிக்கெட்! #T20 #IndVsWI

தோனி  Vs பிராத்வயிட். அமெரிக்காவில் அதிரடி கிரிக்கெட்! #T20 #IndVsWI
தோனி Vs பிராத்வயிட். அமெரிக்காவில் அதிரடி கிரிக்கெட்! #T20 #IndVsWI

தோனி Vs பிராத்வயிட். அமெரிக்காவில் அதிரடி கிரிக்கெட்! #T20 #IndVsWI

தோனி  Vs பிராத்வயிட். அமெரிக்காவில் அதிரடி கிரிக்கெட்! #T20 #IndVsWI

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில்  இரண்டு போட்டி கொண்ட டி-20 தொடர்  நடத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில்  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் உள்ள டர்ஃப் பிட்சில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதுகின்றன. 

வெஸ்ட் இண்டீஸில்  நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்த நிலையில், அரையிறுதி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-0 என டி20 தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.  டி20 போட்டியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்வது சாதாரண விஷயம் இல்லை. கெயில் , பொல்லார்டு, பிராவோ, சுனில் நரேன் என பெரும் நட்சத்திர பட்டாளமே வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில்  இடது கை பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், டி20 ஸ்பெஷலிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்ட ரெய்னாவுக்கும், யுவராஜ் சிங்கிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள செயற்கை புல் தரை பிட்சில் பொதுவாக  டி 20 போட்டிகளில் 200 ரன்களை அடிப்பது எந்தவொரு அணிக்கும் எளிதானதே. எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 220 ரன்களுக்கு மேல் குவிக்க முயற்சி செய்ய வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி?

தோனி எப்படி இந்திய அணிக்கு திரும்புவது பலமோ, அதே போல கெயில், பொல்லார்டு, பிராவோ ஆகிய மும்மூர்த்திகளும் மீண்டும் அணிக்குள் நுழைவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உச்சபட்ச பலம். ஆண்ட்ரே ரஸ்ஸல் டி20 கிரிக்கெட்டுக்கு உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார். சிம்மன்ஸ், சாமுவேல்ஸ் இருவரும் சிறப்பான விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக  இமாலய சிக்ஸர் மன்னன் 'கார்லஸ் பிராத்வயிட்' நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வென்றதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து கேப்டன் சமி பேசியதால் அவர் நீக்கப்பட்டார். சமியின் கேப்டன்சியை அந்த அணி ரொம்பவே மிஸ் செய்யும். எனினும்  வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை தனி நபர் நாயகர்கள் அதிகம். இவர்கள்.  எந்த நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றிவிடுவார்கள் என்பதால் பிராத்வெயிட் கொஞ்சம் நிம்மதியாக வேலை பார்க்கலாம். 

இந்திய அணி எப்படி? 

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் விராட் கோஹ்லி, தோனி, லோகேஷ் ராகுல் ஆகியோரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். டி20 போட்டிகளை பொறுத்தவரை விராட் கோஹ்லி உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார், அந்த பார்மை அவர் தொடர்ந்தால் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் பாடு திண்டாட்டம் தான். ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினால் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். பும்ராஹ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதால், அமித் மிஸ்ரா, ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் நிச்சயம் இருவருக்கு தோனி வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. அமெரிக்காவிலோ, டர்ஃப்  பிட்சிலோ இதுவரை இந்திய வீரர்கள் விளையாடி பழக்கப்பட்டதில்லை. எனவே இந்திய அணிக்கு இந்த தொடர் கடும் சவாலாகவே இருக்கும். 


இன்று மாலை 7.30 மணிக்கு முதல் டி20 போட்டியும், நாளை - ஞாயிறு - மாலை இரண்டாவது டி20 போட்டியும் நடக்கவுள்ளது. இரு அணி வீரர்களும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி : -

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல், மகேந்திர சிங் தோனி, ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஷ்வின், ஜாஸ்பிட் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அமித் மிஸ்ரா, அஜிங்க்யா ரஹானே, உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி :-

ஆண்ட்ரே பிளட்சர், ஆண்ட்ரே ரஸ்ஸல், கிறிஸ் கெயில், கார்லஸ் பிராத்வயிட், டுவைன் பிராவோ, எவின் லெவிஸ், ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், கிரோன் பொல்லார்ட், லெண்டில் சிம்மன்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி, சுனில் நரைன். 

-பு.விவேக் ஆனந்த் 

அடுத்த கட்டுரைக்கு