Published:Updated:

பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!

பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!
பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!

பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!

லிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு ஆந்திர, தெலுங்கானா மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு பரிசுத் தொகை அறிவித்துள்ளன. ஹைதரபாத்தை சேர்ந்த சிந்துவுக்கு ஆந்திர அரசு ரூ. 3 கோடியும் தெலுங்கானா அரசு ரூ.5 கோடியும் அறிவித்துள்ளன. இங்கே இன்னொரு வேதனையான விஷயத்தையும் பகிர வேண்டியது இருக்கிறது.

பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!

கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஹைதரபாத்தை சேர்ந்த சாய்னா நேவால் பேட்மின்டனில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சாய்னா நேவாலுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப் போவதாக அறிவித்தார். பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு காலம் ஆகியும் ஆந்திர அரசு சாய்னாவுக்கு தராமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டது. நாட்டின் 29வது மாநிலமாக உதித்த தெலுங்கானா மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக அதே மாநிலத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிக்கப்பட்டார். சானியா மிர்சாவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் அறிவித்திருந்தார்.

அந்த சமயத்தில், சாய்னா நேவால் ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டை படித்த பல விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், ''தெலுங்கானா மாநிலத்துக்கு சானியா மிர்சா பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதே வேளையில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நான் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக அரசு அறிவித்த பரிசுத் தொகை இன்னும் எனக்கு அளிக்கப்படாமல் இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது'' என கூறியிருந்தார். சாய்னா ட்விட் செய்த பின்னரே அவருக்கு உரிய பரிசுத் தொகையை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில பிரிவினை காரணமாக பரிசுத் தொகை வழங்க தாமதமானதாக அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

பரிசு அறிவிப்பில், சாய்னாவுக்கு நேர்ந்தது சிந்துவுக்கு நேரக்கூடாது!

இந்த நிலையில்தான் ரியோ ஒலிம்பிக்கில் பரிசு வென்ற சிந்துவுக்கு இரு மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை அறிவித்து வருகின்றன. நாட்டுக்கு கவுரவம் சேர்த்தவர்களுக்கு பரிசுத் தொகையை கவுரவமாக அளிக்க வேண்டுமென்பதுதான் விளையாட்டு ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

இதற்கிடையே, துபாயில் வசிக்கும் கேரளத் தொழிலதிபர் முகாட்டு செபஸ்டியன் என்பவர் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு  ரூ.50 லட்சமும் வெண்கலம் வென்ற சாக்‌ஷிக்கு ரூ.25 லட்சமும் பரிசாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' இந்த இரு வீராங்கனைகளும் ரியோவில் பதக்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். என்னால் முடிந்ததை நான் செய்ய நினைத்தேன். ரியோவில் தங்கம் வெல்பவர்களுக்கு ஒரு கோடி  ரூபாய் பரிசு வழங்க முடிவு செய்திருந்தேன்.  சிந்து தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பாராமல் தோல்வியடைந்து விட்டார்'' என்றார்.

ரியோவில் தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்கும் கொச்சியில் பாராட்டு விழா நடத்தவும் செபஸ்டியன் திட்டமிட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக்கை பொறுத்த வரை சிந்து இளம் வயதில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சாக்‌ஷி  ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.

                                                                                                                                                                                      -எம். குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு