Published:Updated:

'நீங்கள்தான் ஒலிம்பிக்கின் அடையாளம்!'

'நீங்கள்தான் ஒலிம்பிக்கின் அடையாளம்!'
'நீங்கள்தான் ஒலிம்பிக்கின் அடையாளம்!'

'நீங்கள்தான் ஒலிம்பிக்கின் அடையாளம்!'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் முதன்முறையான நாடிழந்தவர்கள் அணியும் பங்கேற்றது. ரியோவில் இன்று நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றிருந்த வீரர் வீராங்கனைகள் அணி வகுப்பில் கலந்துகொண்ட போது, அரங்கமே கரகோஷம் எழுப்பி அதை வரவேற்றது. 

நாடிழந்தவர்கள் அணியில் மொத்தம் 10 வீரர் - வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். அதில்  யூஸ்ரா மெர்டினி, என்ற சிரிய நீச்சல் வீராங்கனை மிகவும் பிரபலமானவர். சிரியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு படகில் தப்பி செல்லும் போது தன்னுடன் பயணித்த 19 அகதிகளை காப்பாற்றிய பெருமைக்குரியவர். இவர் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்கிறார். காங்கோ மற்றும் பிறநாடுகளை சேர்ந்த சில வீரர்களும் நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச், நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் - வீராங்கனைகளுக்கு புகழாரம் சூட்டினார். தொடக்க விழாவில் அவர் பேசுகையில், '' நீங்கள்தான் இந்த ஒலிம்பிக்கின் அடையாளம், உலகம் முழுக்க பரவியுள்ள லட்சக்கணக்கான நாடிழந்தவர்களுக்கு உங்களால் பெருமை. அவர்களிடத்தில் நீங்கள் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். போர், வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்நாட்டை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும்,  ஊக்கம் நிறைந்த உங்களை போன்றவர்களால்தான் மனித குலமே பெருமையடைகிறது "என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு