Published:Updated:

உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை!

உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை!
உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை!

உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை!

லக சைக்கிளிங் தரவரிசையில் இந்திய ஜூனியர் அணி,  முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலக சைக்கிள் ரேசிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தரவரிசையில் 11வது இடத்தில் இருந்த இந்திய ஜூனியர் அணி, இந்த தரவரிசையில் 1012.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சைக்கிளிங்  தரவரிசையில் இந்தியக் குழு முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை. போலந்து அணி 960 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், தென்கொரிய அணி 900 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்தது.

இது குறித்து இந்திய சைக்கிள் பந்தய சங்க பொதுச் செயலாளர் ஓன்கார் சிங் கூறுகையில்,'' கடந்த 2013 ம் ஆண்டுதான் சைக்கிள் ஃபெடரேசன் முறையாக செயல்படத் தொடங்கியது. அப்போது ஜூனியர் அணி 149 வது இடத்தில் இருந்தது. இப்போது முதலிடத்தை அடைந்திருக்கிறார்கள். கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. பிற  விளையாட்டுகளைப் போல  சைக்கிளிங் வீரர்கள் ஒரே பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவதில்லை. அணியில் 15 வீரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனி பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுகின்றனர். ஜப்பானில் நடைபெறும் கெரின் சைக்கிள் போட்டியில், இந்தியக்குழுவை சேர்ந்த சானுராஜ்  10வது இடத்தை பிடித்திருந்தார்.

ஆடவர் போலவே மகளிர் அணியிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஜூனியர் அணி 8வது இடத்தை அடைந்திருக்கிறது. வீராங்கனைகள் தரவரிசையில் முதல் 20 இடத்திற்குள் அனு சோத்தியா உள்ளார். அந்தமானைச் சேர்ந்த வீராங்கனை தெபரா ஹெரால்ட், உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெறவில்லையென்றாலும் அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இலக்காக வைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்'' என்றார்.

இந்திய ஜூனியர் சைக்கிள் அணி, சுவிட்சர்லாந்தில் யூசிஐ டிராக் சைக்கிள் போட்டியில்  அடுத்தததாக பங்கேற்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியக் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு