Published:Updated:

அக்கறையின்மைக்கு கொடுத்த விலை.... 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்?

அக்கறையின்மைக்கு கொடுத்த விலை.... 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்?
அக்கறையின்மைக்கு கொடுத்த விலை.... 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்?

அக்கறையின்மைக்கு கொடுத்த விலை.... 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்?

ந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா,  நேற்று முன்தினம் (07-03-2016) வைத்த பிரஸ்மீட் சர்வதேச டென்னிஸ் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒதுக்குபுறமாக நடந்த அந்த பிரஸ்மீட்டில் இருந்த செய்தியாளர்கள்,  காயம் காரணமாக ஓய்வு அறிவிப்பார் என்றுதான் எதிர்பார்த்து சென்றனர். ஏனென்றால் சில காலமாகவே தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

அக்கறையின்மைக்கு கொடுத்த விலை.... 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்?

ஆனால் பிரஸ்மீட்டில்,  இந்த ஆண்டின் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலியன் ஓப்பன் போட்டியில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து கண்டுபிடிப்பு சோதனையில் தான் தோல்வி அடைந்ததாக ஷரபோவா கூற,  கூடியிருந்தவர்களுக்கோ கடும் அதிர்ச்சி.

மேலும் ஷரபோவா,  " நான் இத்தனை நாளாக எனது உடல் நலனை கருத்தில் கொண்டு  உடகொண்டு வந்த  "மெல்டோனியம்" மருந்து கடந்தஆண்டு செப்டம்பர் மாதம் தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 (2016) முதல் வழக்கத்திற்கு வந்துள்ளது" என்றார்.

தற்போது 28 வயதாகும் ரஷ்யாவை சேர்ந்த ஷரபோவா, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்தே, உடல் உபாதைகளின் காரணமாக "மெல்டோடினியம்" என்ற மருந்தை மருத்துவர்கள் அறிவுரையின்படி எடுத்து வந்துள்ளார்.  லாத்வியாவில் இதய நோயாளிகளுக்காகத்தான் இந்த மருந்து தயார் செய்யப் பட்டுள்ளது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் இந்த மருந்து, அமெரிக்காவில் விற்பனைக்கு தடை செய்யப் பட்டுள்ளது. மெல்டோனியத்தைத் தடை செய்வதற்கான காரணம், அது ஆக்சிஜன் உட்கொள்ளுதலை அதிகப்படுத்தி, உடம்பை நீண்ட நேரம் சோர்வடையச் செய்யாமல் வைத்துக் கொள்ளும்.

தனது தவறுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து  மரியா ஷரபோவாவுடன், "நைக்கி" நிறுவனம் தன்னுடைய ஒப்பந்தத்தை தற்காலிகமாக துண்டித்துக் கொண்டுள்ளது.புகழ் பெற்ற கைக் கடிகார நிறுவனமான "டேக் ஹுவர்"ம் ஷரபோவா உடனான ஒப்பந்தத்தை விலகிக் கொண்டுள்ளது.

பரிசோதனை முடிவைப் பற்றி பேசிய உலக ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பகத்தின் தலைவரான டிக் பவுண்ட் "நாம் நினைப்பதை விட ஆபத்தானது" இது என்று மெல்டோனியம் பற்றிக் கூறியுள்ளார்.

'WADA ' என்று அழைக்கப்படும் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம்,பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரர்-  வீராங்கனைகளுக்கும் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த ஆவணத்தை மெயிலில் அனுப்பியுள்ளது.  அந்த மெயிலை ஷரபோவா படிக்கத் தவறியதாக கூறப்படுகிறது.  அந்த ஆவணத்தில் "மெல்டோனியம்" பற்றியும் அதன் மேல் விதிக்கப் பட்டிருக்கும் தடை பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, ஷரபோவா எப்படி அந்த மெயிலை படிக்காமல் விடலாம்? ஒரு விளையாட்டு வீராங்கனை   இதைக் கூட கவனிக்க மாட்டாரா? என பலதரப் பட்ட கேள்விகளும் ஷரபோவாவை நோக்கிய பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

போர்ப்ஸ் பட்டியலின் படி,  உலகிலேயே டென்னிஸ் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகளில் கடந்த 11 ஆண்டுகளாக ஷரபோவாதான் முதலிடத்தில் இருக்கிறார். வேறு எந்த சர்ச்சையிலும் சிக்கியது கிடையாது. ஆனால்  அக்கறையின்மை அவரது டென்னிஸ் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

மு.சித்தார்த்

(மாணவப் பத்திரிகையாளர் )

அடுத்த கட்டுரைக்கு