Published:Updated:

டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!

டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!
டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!

டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!

டந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல் அணியின் ஆலோசகராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இவ்வாண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரோடு அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராக பேடி அப்டனும், பேட்டிங் மற்றும் பவுலிங் ஆலோசகர்களாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் டி.ஏ.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோல்ஜர் மேக்கர்

அனைத்து ஐ.பி.எல் அணிகளும் கோடிகளை கொட்டி நட்சத்திர வீரர்களை விலைக்கு வாங்கியபோது, லட்சங்களைக் கொட்டி லட்சியத்தோடு நிற்கும் இளசுகளுக்கு வாய்ப்பளித்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ரவிந்திர ஜடேஜா, ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டூவார்ட் பின்னி என பல வீரர்களும் இந்திய அணிக்குள் வருவதற்கு மிகப்பெரிய பாலமாய் அமைந்த அணி ராயல்ஸ்.

டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!

 ஆனால் அந்த வீரர்களையெல்லாம் அடைகாத்து அழகாக்கியவர் கிரிக்கெட்டின் பெருஞ்சுவரான ராகுல் டிராவிட். தான் கேப்டனாக இருந்த போது, களத்தில் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கை அளித்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவ்வணியின் ஆலோசகராகப் பணியிலமர்ந்த டிராவிட்டின் செயல்பாடுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

வாட்சன், ஸ்டீவ் சுமித் போன்ற ஒன்றிரு நட்சத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, உள்ளூர் போட்டிகளில் சோபித்தும், கவனிக்கப்படாத இந்திய வீரர்களையே அவர்கள் பெரிதும் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்து தண்ணீர் பாட்டில் மட்டும் தூக்க வைக்காமல், அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்தார் டிராவிட். ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிரூபிக்க அதிகளவில் வாய்ப்புகள் அளித்தார். சஞ்சு சாம்சன், கருன் நாயர், பிரவீன் தாம்பே என இந்தியர்களை மையமாகக் கொண்டே அவ்வணியை உருவாக்கினார் இந்த ஜாம்பவான். அதனாலேயே என்னவோ தங்கள் ஃபேவரிட் அணிக்கு அடுத்து ஒவ்வொரு இந்தியனும் ராயல்சயே

டெல்லி அணியின் ஆலோசகரானார் ராகுல் டிராவிட்!

ஆதரித்தனர். அப்படி ஒரு இளம் அணியை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஒவ்வொரு முறையும் ஒரு போராடும் படையாகவே உருவாக்கினார். கடந்த முறைகூட அவ்வணி அரையிறுதியில்தான் தோற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

ராயல்சிலிருந்து டெவில்சிற்கு

அவரின் அபார செயல்பாடே, இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு அவரைப் பயிற்சியாளராக நியமிக்க வைத்தது. அந்த அணியையும் ஜூனியர் உலகக்கோப்பையின் இறுதி வரை டிராவிட் வழிநடத்திச்சென்றார். சூதாட்டப் புகார் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து ராஜஸ்தான் அணி நீக்கப்பட்டதால், டிராவிட்டை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்,  டெல்லி அணி  அவரை தற்போது ஆலோசகராக நியமித்துள்ளது. முதல் இரண்டு சீசன்களில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அவ்வணி,  அதன்பிறகு ஐ.பி.எல் லின் மோசமான அணி என்று கருதும் அளவிற்கே செயல்பட்டது. உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டனை,  சில மாதங்கள் முன்பு டெல்லி அணி,  பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவித்தது. டிராவிட்டை மட்டுமல்லாது, ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பேடி அப்டனையும் அப்படியே இறக்குமதி செய்துள்ளது டேர்டெவில்ஸ் அணி. பிரவீன் ஆம்ரேவும், ஸ்ரீதரன் ஸ்ரீராமும் பேட்டிங் ஆலோசகர்களாகவும், டி.ஏ.சேகர் பவுலிங் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீதரன் ஸ்ரீராம் மெட்ராசைச் சேர்ந்தவர். இடது கை பேட்ஸ்மேனான இவர்,  இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மிதவேகப்பந்து வீச்சாளரான சேகரும் தமிழகத்தைச் சார்ந்தவரே. அவரும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

அடுத்த பயணம்

பீட்டர்சன், யுவராஜ், மாத்யூஸ் போன்ற பெரிய வீரர்களையெல்லாம் கொண்டிருந்த டெல்லி அணி, தொடர் தோல்விகள் காரணமாக அவர்களை விடுவித்தது. இம்முறை ஏலத்தில்,  இளம் இந்திய வீரர்களை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது அவ்வணி. இளம் ஆல்ரவுண்டர் பவன் நேகியை,  அதிகபட்சமாக 7.5 கோடிக்கு வாங்கிய அவ்வணி, சஞ்சு சாம்சன், கருந் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிசாப் பன்ட் போன்ற இளம் படையையே தன்னகப்படுத்தியுள்ளது.

இவர்களுள் சாம்சன், நாயர் ஆகியோர் ஏற்கனேவே டிராவிட்டோடு ராயல்ஸ் அணியில் விளையாடியுள்ளனர். ரிசாப் பன்ட், டிராவிட் பயிற்சி செய்த இந்திய ஜூனியர் அணியின் நட்சத்திர வீரராவார். இப்படி ஏற்கனவே பணியாற்றியவர்கள் மட்டுமின்றி, ஜாகிர் கான், அமித் மிஷ்ரா என தன்னோடு விளையாடிய வீரர்களும் இடம்பெற்றுள்ளதால் புது அணியினரோடு டிராவிட் எளிதில் இணைந்துகொள்வார். தான் எதிர்பார்க்கும்படி இளம் வீரர்கள் கொட்டிக் கிடப்பதால், டிராவிட் தனது ஸ்டைலிலேயே எளிதில் செயல்பட முடியும்.

இத்தனை நாட்கள் ஐ.பி.எல் இறுதிப்போட்டியைக்கூடப் பார்க்காத டெல்லி அணிக்கு டிராவிட்டின் ரூபத்தில் விடிவு காலம் பிறக்குமா...  இந்த ஐ.பி.எல் தொடரிலாவது டேர்’டெவில்ஸ்’ பயமுறுத்துமா என்பதை  பார்ப்போம்.

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு