Published:Updated:

இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டினா குரோ!

இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டினா குரோ!
இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டினா குரோ!

நியூசிலாந்து முன்னால் கிரிக்கெட் விரர் மார்ட்டின் குரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 53.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவு. மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்த மார்ட்டின் குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டினா குரோ!



கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆக்லாந்து  மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

கடந்த 1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான மார்ட்டின் குரோ 13ஆண்டுகள் நியூநிலாந்து அணிக்காக விளையாடினார். 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 444 ரன்ளை அடித்துள்ளார். இதில் 17 சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 299 ரன்கள் ஆகும். சரசாரி 45.36. 143 ஒரு நாள் போட்டிகளிலும் மார்ட்டின் குரோ விளையாடியுள்ளார்.


நியூசி. உலகக் கோப்பையை வெல்வது மார்ட்டின் குரோவின் ஆசை!

இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் இருக்கும் நாட்கள் நரகமாகிவிடும்தானே. இந்த நிலைதான்  நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவுக்கும். மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்த மார்ட்டின் குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவர் இன்னும் வாழப்போவது 12 மாதங்கள் மட்டுமே என்றும் அதற்கு மேல் உயிர்வாழ  5 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

நோய் கொடுமை இருந்தாலும் 40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியை நேரில் பார்க்க மெல்பர்ன் மைதானத்திற்கே வந்திருந்தார்  மார்ட்டின் குரோ.

அதோடு ''நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்றும், இதுதான் நான் நேரில் பார்க்கும் கடைசிப் போட்டி' என்றும் மார்ட்டின் குரோ உருக்கமாக கூறியது கிரிக்கெட் ரசிகர்களை என்னவோ செய்தது. தொடர்ந்து லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தனர்.

குறைந்தபட்சம் இந்த மனிதருக்காகவாவது நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டனர். ஆனால் நியூசிலாந்து அணியின் போதாத நேரம் இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோற்றுப்போனது.

போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மார்ட்டின் குரோவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற கனவுடன் மெல்பர்ன் வந்த மார்ட்டின் குரோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்தவும் அவர் தவறவில்லை.

இந்த நிஜ கிரிக்கெட் வீரருக்காகவாவது நியூசிலாந்து அணி  கடந்த  உலகக் கோப்பையை வென்றிருக்கலாம் என்று மனம் பதை பதைப்பதை மட்டும் இன்னும் தவிர்க்க முடியவில்லை!

 

அடுத்த கட்டுரைக்கு