Published:Updated:

தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!

தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!
தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய கூடைப்பந்து போட்டியில், மேற்குவங்க அணியை வீழ்த்தி பிரியங்கா மகள் பங்கேற்றுள்ள ஹரியானா அணி வெற்றி பெற்று உள்ளது.

தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!

அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 22 அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!

தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்று போட்டிகளில், பெண்கள் பிரிவில் ஹரியானா மாநில அணியில் சோனியா காந்தியின் பேத்தியும், பிரியாங்கா காந்தியின் மகளுமான மிரயா வதேரா பங்கேற்று விளையாடி வருகிறார். நேற்று நடந்த முதல் போட்டியில் ஹரியானா அணி, தமிழக அணியை எதிர்த்து விளையாடியது. அதில், தமிழக அணி வெற்றி பெற்றது.

தேசிய கூடைப்பந்து போட்டியில் பிரியங்கா மகள் அணி வெற்றி!

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய 2–வது போட்டியில் ஹரியானா அணியை எதிர்த்து மேற்கு வங்காள அணி விளையாடியது. 4 சுற்றுகளாக தலா 10 நிமிடங்கள் போட்டிகள் நடைபெற்றன. இதில், 2–வது சுற்றில் மட்டும் மிரயா வதேரா பங்கேற்று விளையாடினார். தடுப்பு ஆட்டக்காரராக களம் இறங்கிய அவர், எதிர் அணியினர் புள்ளிகள் எடுப்பதை பலமுறை தடுத்தார்.

ஒரு முறை, வாய்ப்பாக வந்த பந்தை வளையத்துக்குள் போட்டு தனது அணிக்கு 1 புள்ளியை பெற்று தந்தார். ஆட்ட நேர இறுதியில், ஹரியானா அணி 45–19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அணி வென்றதும் மிரயா வதேரா உள்ளிட்ட அனைவரும் உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

தொடக்க நாளான நேற்றே போட்டியைக் காண பிரியங்காவும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முழுவதும் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியே வரவில்லை. பாதுகாப்புக் காரணங்களால் அவர் வரவில்லை என்று சொல்லப்பட்டது.

அதனால், இன்று காலையாவது அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால், விளையாட்டரங்கில் சீருடை அணியாத போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்றும் ஆட்டம் முடியும் வரை அவர் வரவில்லை.

தனிப்பட்டமுறையில் வந்திருப்ப்பதால் பிரியங்காவின் வருகை குறித்து புதுச்சேரி கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தவில்லை. மேலும் அவரை மட்டுமல்லாமல் மிரயா வதேராவையும் சந்திக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கட்சி மேலிடம் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதால், விளையாட்டு அரங்கத்தின் பக்கம் கூட ஒரு கரை வேட்டியை பார்க்க முடியவில்லை.

- ஜெ.முருகன்

படங்கள்: குரூஸ் தனம்