Published:Updated:

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!
திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

ரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்து இன்று சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகன் வரை உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மும்பையை சேர்ந்த பிரணவ் தோனவாடே. ஆயிரம் ரன்களை அடித்த தோனவாடேவின் இன்னிங்சில்  சில சுவாரஸ்யங்கள்.

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

கிரிக்கெட் உலகில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ்.

பிரணவ் ஆயிரம் ரன்களை எட்டியது மும்பை மக்களுக்கு தெரிய வந்ததும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மைதானத்திற்கு திரண்டு வந்து  விட்டார்கள். சில அரசியல்வாதிகளும் பொக்கேவுடன் மைதானத்திற்கு வந்து வாழ்த்தினர்.

பிரணவின் ஆயிரம் ரன்களில் 59 சிக்சர்களும் அடங்கும். மைதானத்தின் அருகில் இருந்த கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் நொறுங்கி போய் விட்டனவாம்.

ஆயிரம் ரன்களை எட்டுவதற்குள் பிரணவ் 9 முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். அதில், 7 கேட்ச்சுகளும் 2 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

ஆயிரம் ரன்களை அடித்ததும் பிரணவ் ஒரு அறைக்குள் வைத்து பூட்டப்பட்டார். அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பிரணவ் ஓய்வெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

பிரணவின் ஆயிரம் ரன்களில், எதிர்த்து விளையாடிய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து விட்டார். ஆர்ய குருகுல பள்ளி அணியின் பந்துவீச்சாளர்கள் சலுங்கே 20 ஓவர்களில் 284 ரன்களையும், பர்தீப் படேகர் 18 ஓவர்களில் 241 ரன்களையும், ஆயுஸ் டுயூபே 23 ஓவர்களில் 350 ரன்களையும்,  ஹர்சால் ஜாதவ் 18 ஓவர்களில் 281 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இதில் ஆயூஸ் டுயூபேவின் நிலைதான் பரிதாபம்.

இந்த போட்டியின் போது 15 வயது பிரணவ் பயன்படுத்திய பேட்,  ஒரு கிலோ 300 கிராம் எடை கொண்டது. 300 ரன்கள் எடுத்த பின் மட்டும் ஒரு முறை பேட்டை மாற்றிக் கொண்டார்.

பிரணவின் தந்தை மும்பை கல்யாண் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பிரணவ், 1000 ரன்கள் அடித்த செய்தி தெரிந்ததும் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மைதானத்திற்கு திரண்டு வந்து வாழ்த்தினர்.

போட்டி நடந்த மைதானத்தில் இருந்து தனது தந்தையின் ஆட்டோவிலேயே, கல்யாணுக்கு பிரணவ் வாழ்த்து கோஷங்கள் முழங்க அழைத்து செல்லப்பட்டார்.

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

அப்போது மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் பிரணவுக்கு பரிசுகள் வழங்கினர். அரசியல்வாதிகள் பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.

'யார பார்த்தாலும் எப்படிப்பா இப்படி அடிச்சானு கேக்குறாங்க.... எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்குனு' இப்போது பிரணவ் சொல்கிறார்

உங்களுக்கு பந்து வீசுனவங்களுக்குதான் இப்போ பைத்தியம் பிடிச்சுருக்கனும்னு  நமக்கு சொல்லத் தோணுது!