Published:Updated:

சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!

சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!
சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!

சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ...

சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்:

சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!

சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இருக்கிறது.

சூப்பர் கிங்ஸ் போலவே ஆரம்பத்தில் தோல்வியோடு  ஆரம்பித்து புள்ளி பட்டியலில் 7வது இடம் வரை சறுக்கி இருந்த சென்னை அணி கடைசி நான்கு ஆட்டங்களில் 4-1, 4-0 , 3-0, 1-0 என வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக அரையிறுதியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அரையுறுதியின் முதல் ஆட்டத்தில் 3-0 என தோற்கடித்து ஐ.எஸ்.எல் தொடரின் கில்லி அணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோல்டன் பூட்:

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் மெண்டோசா விளையாடவில்லை. அடுத்து ஆடிய ஆட்டங்களில் எல்லாம் எதிரணியின் கவனம் முழுவதும் இவர் மீது தான். இவரை சமாளித்தால் வென்று விடலம் என்பதே பல அணிகளின் உத்தியாக இருந்தது. பந்தை லாவகமாக கடத்தி சென்று கோலாக்குவதில் தெறி வீரர் மெண்டோசா. 14 ஆட்டங்களில் 12 கோல்களுடன் கோல்டன் பூட் இவர் கையில் தான். யாருமே இவரது எண்ணிக்கைக்கு அருகில் இல்லாத நிலையில் இவருக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது கோல்டன் பூட். சென்ற வருடமும் எலானோ ப்ளூமர் மூலம் சென்னைக்கு தான் கோல்டன் பூட்.

GOOOALLL! Jeje and Mendoza link up beautifully before the latter scores his 12th goal of the season! We lead 3-0! #ItsInOurBlood #PoduMachiGoalu

Posted by Chennaiyin FC on 12 December 2015

கோல்டன் பால்:

எடெல் பீடே சென்னையின் கோல்கீப்பர் தான் இந்த தொடரின் சிறந்த கீப்பர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 100 நிமிடங்களுக்கு ஒரு முறைதான் இவரை தாண்டி பந்து செல்கிறதாம். அப்படியென்றால் 2 ஆட்டங்களுக்கு ஒரு கோல் தருகிறார் என்கிறது புள்ளிவிவரம். சென்னை அணியை போலவே ஆரம்பத்தில் சொதப்பி பின்னர் ஃபார்முக்கு திருன்பியவர் எடேல். இவர் மூலம் கோல்டன் பந்தும் சென்னை அணிக்கு உறுதியாகிவிட்டது.

ISL Season 2 M51 Chennai v MumbaiApoula Edima Edel Bete of Chennaiyin FC during match 51 of the Indian Super League...

Posted by Chennaiyin FC on 2 December 2015

தெறி கேப்டன்:
 

புட்பால் கிரிக்கெட் போல கூல் கேம் கிடையாது. களத்தில் வார்த்தை பரிமாற்றங்கள், சில சமயம் மோதல் கூட ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பெரிதும் அலட்டி கொள்ளாமல் பந்தை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் திறமை கொண்டவர் எலானோ ப்ளூமர். நியாமான வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபடும் இவருக்கு மொத்த சென்னையும் ஃபேன் காரணம் இவர் கேப்டன் என்பது மட்டுமல்ல இவர் டி-ஷர்ட் எண் 7 என்பதும் கூட தான். சென்னையின் எஃப்.சியின் தோனியாகவே இவரை பார்க்கிறது சென்னை.

#MersElano scored his 4th goal of the season and 12th for the club with a sublime volley on Wednesday. How many do you think will he go on to score? #ItsInOurBlood #PoduMachiGoalu

Posted by Chennaiyin FC on 12 November 2015


லுங்கி டான்ஸ்:

சென்னை அணியின் ஆட்டம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி சென்னை அணியின் ஆட்டத்தை காண வேறு காரணங்களும் இருக்கின்றன. சென்னை அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன் முதல் பாதி முடிந்தவுடன் லுங்கி டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. தோனி ஆட்ட ப்ரேக் டைமில் கோல் கீப்பராக பந்துகளை தடுத்து ரசிகர்களை உற்சாக படுத்துவதும் இந்தியா புட்பால் பக்கம் பார்வையை திருப்ப காரணமாகியுள்ளது.

Chennaiyin FC vs Delhi Dynamos Crowd Reaction

Take a look at the wonderful scenes inside Marina Arena on the way to our biggest home win of this season! #ItsInOurBlood #PoduMachiGoalu

Posted by Chennaiyin FC on 26 November 2015

சூப்பர் ஸ்டார்கள்:

மற்ற அணி வீரர்களை விட சென்னை அணி வீரர்களே இந்திய அளவில் டாப். மெண்டி, மெண்டோசா, எலானோ, ப்ரூனோ போன்ற வெளிநாட்டு வீரர்களும், ஜீஜே, பல்வந்த் சிங், தன்பால் என இந்திய வீரர்களுக்கும் பெரிய ஃபேன் பட்டாளம் உள்ளது. மொத்தத்தில் ஐ.எஸ்.எல் டாப் 10ல் சென்னை வீரர்களுக்கே அதிக  இடம். சென்னையில் நடக்கும் போட்டிகளில் எலானோ...எலானோ என்ற கோஷம் சில சமயம் நாம் இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

சென்னை தான் எல்லாம்:

ஐ.பி.எல் போட்டியில் சென்னைக்காக ஆடிய டூப்ளெசிஸ் இந்தியாவுக்காக ஆட சென்னை வரும்  போது மீண்டும் எனது ஹோம் கிரவுண்டில் ஆடப்போகிறேன் என ட்விட் செய்தார். அதேபோல் அனைத்து வீரர்களுமே சென்னை என்ற உணர்வோடு உள்ளவர்கள். அரையிறுதி ஆட்டத்தின் வெற்றியை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்பணித்துள்ளனர். ப்ரே ஃபார் சென்னை என்ற ஹேஷ்டேக்கோடு தான் ஆட்டத்தை தொடர்ந்தது சென்னை.


2 ஆண்டுகளுக்கு விசில் போட முடியாது என கூறினாலும். சென்னையின் எஃப்.சிக்காக போடு மச்சி கோலு என அடித்து கூற முடியும். சேப்பாக்க ரசிகர்களை சென்ட்ரலுக்கு அழைத்து வந்து விசில் போட வைத்திருக்கிறது சென்னையின் எஃப்.சி. இறுதி போட்டியையும் வென்றால் கெத்தாக சொல்லலாம். சென்னையின் எஃ.சிக்கு விசில் போடு என்று....

ச.ஸ்ரீராம்

அடுத்த கட்டுரைக்கு