Published:Updated:

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

இன்றைய தேதியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் உலக தரவரிசைபட்டியலில் முதலிடம் இருப்பது யார்  என உங்களுக்கு தெரியுமா? சானியா மிர்சா தான்.  கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்தத்துவம் எப்போதுமே மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதே இல்லை, அதனால் சானியாவின் சாதனை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தால் கொண்டாடும் நாம், டென்னிஸ் உலகத்தில் நம்பர் ஒன்  வீரராக இருப்பவரை கொண்டாடியிருக்க வேண்டாமா? சானியா எளிதில் முதலிடத்தை பிடிக்கவில்லை இதற்கு பின்னர் 20 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. சர்ச்சைகளை உடைத்தது தடைகளை தகர்த்து சானியா எப்படி நம்பர்  ஒன்  இடத்தை பிடித்தார் என பார்ப்போமா ?

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

சானியா உடைத்த ஐந்து தடைகள்

1.  ஆறு வயதில்  இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா . அவரது ஆரம்பகால பயிற்சியாளரே  அவரது அப்பா இம்ரான் மிர்சா தான்  . 90 களின் ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கரின் வருகையால்,  இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவியிருந்தது. டென்னிஸ் விளையாடுவதில் சானியாவுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு, அக்காலகட்டத்திலேயே ,  சானியாவை ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டே வளர்த்தார் இம்ரான் . பள்ளி பருவத்தில் இருந்தே மற்றவர்கள் செல்லும் பாதையை தவிர்த்து   வேறொரு பாதையில் பயணித்து வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் சானியாவுக்கு உண்டாம். பள்ளிப்பருவத்தில்  சானியா  வகுப்பில் இருந்த நேரத்தை விட கிரவுண்டில் இருந்த நேரம் தான் அதிகம். ஆனால் சானியா  டென்னிசில்  மட்டுமல்ல வகுப்பிலும் நல்ல ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். டென்னிஸ் தொடர்களில் ஜொலிக்க வேண்டுமென்றால் திறமை மட்டும் போதாது பணமும் வேண்டும், ஏனெனில் பல நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யவேண்டி நேரிடும், தங்கும்  ஹோட்டல், சாப்பாடு ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவிட நேரிடும். தனது அப்பாவுக்கு  சிரமத்தை குறைப்பதற்காக, நிறைய ஸ்காலர்ஷிப்கள் பெறுவதற்காகவே  தினமும் கூடுதல் நேரம் உழைத்து  படிப்பிலும் கில்லியாக இருந்தவர் சானியா. ஒரு நல்ல விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் எக்காரணமும் படிப்பை விடக்கூடாது, நன்றாக படிக்கவும் செய்து, விளையாடவும் செய்தால் பணச்சுமையை எளிதில் தகர்க்கமுடியும் "என்பது  சானியா அட்வைஸ்.

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

2.  தனது 16 வயதில், இளம்பெண்கள் இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் டைட்டில் வென்றார் சானியா. அதன் பின்னர் தான் சானியா மிர்சா பெயர்கள் பத்திரிகைகளில்  அடிபடதொடங்கின. ஆனால் அதன் பின்னர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி குட்டை பாவாடை அணிந்து விளையாடலாம் என சிலர் சர்ச்சைகளை கிளப்ப, சானியா மிர்சா  லைம் லைட்டுக்கு வந்தார், அந்த சர்ச்சைக்கு பிறகு சானியா மிர்சா விளையாடும் போட்டிகளை பலர் உற்று நோக்க தொடங்கினார்கள். "நான் போட்டியில் வென்றால், நான் அணிந்திருப்பது ஆறு இன்ச் உடையா, ஆறடி உடையா என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்  ஆனால் தோற்றுவிட்டால் அடுத்த மூன்று நாட்களுக்கு உடை குறித்து சர்ச்சை கிளப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான்  தீர்மானிப்பேன் " என துணிச்சலாக பதிலளிக்க இந்தியா முழுவதும் சென்சேஷன் ஆனார் சானியா . ஒரு பெண், பல தடைகளை கடந்து டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெயர் வாங்கித்தரும் வேளையில் கிளாமர் கிராமர் குறித்த வகுப்பெடுப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது சானியாவின் துரதிர்ஷ்டம்.

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

3.  குஷ்பு ஒருமுறை திருமணத்து முந்தைய உடலுறவு குறித்து பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. அச்சமயத்தில் சானியாவின் கருத்து  என்ன என பத்திரிக்கையளர்கள் கேட்க, " திருமணத்துக்கு முன்போ, பின்போ எதுவாக இருந்தாலும் பாதுக்காப்பான உடலுறவு இருப்பது அவசியம்" என்றார். ஏனெனில் அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் குறித்த பேச்சுகள் ஊரெங்கும் நிரம்பியிருந்தது. சிலர் சானியாவின் கருத்தை சர்ச்சையாக்கி, திருமணத்துக்கு முந்தைய உடலுறவை  சானியா ஆதரிக்கிறார் என செய்திகள் பரப்ப, நாடெங்கும் சானியாவின் உருவ  பொம்மைகள் எரிக்கபட்டது, அதன் பின்னர் "எக்காலத்திலும் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை  நான் ஆதரிக்க மாட்டேன், கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளபட்டது என அவர்  விளக்கம் கொடுத்த பின்னர் தான் பிரச்னை ஓய்ந்தது.

சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

4. சர்ச்சைகள் சானியாவின் ஆட்டதிறனை பாதிக்கவில்லை என்பதற்கு உதரணமாக 2009 ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில், மகேஷ் பூபதியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி டைட்டில் வென்றார். இந்நிலையில் சானியா மிர்சாவுக்கு அவரது பள்ளிபருவ நண்பர் சொஹ்ரப் மிர்சாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நின்று போனது. அதன் பின்னர் யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார் சானியா. சானியா பாகிஸ்தான் மருமகள் இந்தியாவுக்காக விளையாடக்கூடாது என பல அமைப்புகள் மீண்டும் சர்ச்சையை கிளப்ப நான் முதலில் 'இந்தியாவின் மகள்' இந்தியவுக்காக தான் விளையாடுவேன் என பேட்டி தட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சானியா மிர்சா .

5. சானியா மீது எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு  வைக்கப்படுவதுண்டு, ஒற்றையர் பிரிவில்  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதி வரை கூட செல்வதில்லை என்பதே அது. சானியாவை பொறுத்தவரையில் அவர் வேகமாக கால்கள் நகர்த்துவதில் சற்று மந்தமாக இருப்பார், இதனால்  ஒற்றையர் பிரிவில்  ஜாம்பவான்களுடன் போட்டி போடும்போது  சொதப்பிவிடுவார். இது ஒற்றையர் பிரிவில் விளையாடுபவர்களுக்கு மிகப்பெரிய பலவீனம், தவிர ஒற்றையர் பிரிவில் விளையாடுவதால் பல காயங்கள் ஏற்படவே ஒற்றையர் போட்டிகளுக்கு முழுமையாக முழுக்கு போட்டார். முன்கையில் சானியாவுக்கு பலம் அதிகம். கிரவுண்ட் ஸ்ட்ரோக்கில் சானியா கில்லி என்பதால் இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரம் தொட முடியும் என்பதை உணர்ந்து கடைசி இரண்டு ஆண்டுகளாக இரட்டையர் பிரிவில் விளையாடி  தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார்.

 சானியாவுக்கு சவால் என்பது மிகவும் பிடிக்கும், தன்னை விட முன்னணியில் இருக்கும் வீரர்களை வெல்வதே  சானியாவின் லட்சியம், எதிரிகள் பலமாக இருந்தால் தான்   தோல்வி அடைந்தாலும் நம்முடைய முழு திறமையை உணர முடியும். வலுவற்றவர்களை வென்று வெற்றுக்கூச்சல் இடுவது தனக்கு பிடிக்காது என்பதை சானியா எப்போதும் அவரது அப்பாவிடம் வலியுறுத்துவாராம்.  இந்த ஆண்டு  இரட்டையர் பிரிவல் மட்டும்  பத்து டைட்டில்கள் வென்றுள்ளார் சானியா, அதில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் அடங்கும். இந்த வெற்றிகளுக்கு போனசாக தரவரிசையில் நம்பர் ஒன் இடம் கிடைத்திருக்கிறது. ஆறு வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த சானியாவுக்கு தனது 29 வது வயதில் தான் நம்பர்1 அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ஒரு பெண்ணாக இந்தியாவில் இருந்து உச்சம் தொட்ட சானியாவுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.

#happybirthdaysaniamirza #saniamirza .

- பு.விவேக் ஆனந்த்

அடுத்த கட்டுரைக்கு