Published:Updated:

'பல்லான் டி ஆர்' விருதுக்கு ரொனால்டோ, மெஸ்சி பெயர்கள் பரிந்துரை!

Vikatan Correspondent
'பல்லான் டி ஆர்' விருதுக்கு ரொனால்டோ, மெஸ்சி பெயர்கள் பரிந்துரை!
'பல்லான் டி ஆர்' விருதுக்கு ரொனால்டோ, மெஸ்சி பெயர்கள் பரிந்துரை!

ந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு ( தங்கப்பந்து ) ரியல்மாட்ரிட் அணியின்  ஸ்டிரைக்கர் ரொனால்டோ, பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்சி உள்ளிட்ட 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

'பல்லான் டி ஆர்' விருதுக்கு ரொனால்டோ, மெஸ்சி பெயர்கள் பரிந்துரை!

உலக கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கால்பந்து வீரருக்கு 'பல்லான் டி ஆர் ' விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதை ரொனால்டோ பெற்றார். இந்த ஆண்டுக்கான விருதுக்கு 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பட்டியலில் ரியல்மாட்ரிட் அணியின் ரொனால்டோ மீண்டும் இடம் பெற்றுள்ளார். பார்சிலோனா தரப்பில் இருந்து மெஸ்சி, நெய்மர், மான்செஸ்டர் சிட்டியின் செர்ஜியோ அகுரா, பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச் , பார்சிலோனா கேப்டன் ஆன்ட்ரஸ் இனியஸ்டா ஆகியோரும் 23 பேர் கொண்ட இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட இந்த 23 வீரர்களில் இருந்து ரசிகர்கள் , ஃபிஃபா இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வாக்களிப்பார்கள். இதில் முதல் 3 இடங்களை பெறுபவர்களில் இருந்து விருதுக்குரிய வீரர் தேர்வு செய்யப்படுவார். விருதுக்குரிய வீரரை கால்பந்து பயிற்சியாளர்களும் விளையாட்டுத்துறை செய்தியாளர்களும் ஓட்டெடுப்பு வழியாக தேர்வு செய்வார்கள்.

அதேபோல் சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு, கார்லோ அன்ஸாலட்டி (ரியல்மாட்ரிட் )  பெப் கார்டியாலா (பேயர்ன்மியூனிச் ) ஜோஸ் மோரின்ஹோ (செல்சி ) மாசிமிலனோ அலெகிரி ( ஜுவான்டஸ் ) உள்ளிட்ட 10 பயிற்சியாளர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.