Published:Updated:

அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு!

அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு!
அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு!

அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், அக்டோபர்  29ஆம் தேதி, தனது நீண்ட நாள் காதலியான கீதா பஸ்ராவை மணக்கிறார்.
 

அக்டோபர் 29ஆம் தேதி ஹர்பஜனுக்கு கால்கட்டு!

தற்போது 33 வயதான ஹர்பஜனும், பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்வாரா என்ற இடத்தில், திருமணம் நடைபெறவுள்ளது. 

அந்த சமயத்தில் தென்ஆப்ரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும். இதனால் திருமண தேதியில் ஒருநாள் முன்னதாகவோ பின்னதாகவோ மாற்றம் இருக்கலாம் என்று ஹர்பஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சுற்றுப்பயணம் முடிந்து ஹர்பஜன் இந்தியா திரும்பியதும், திருமண அழைப்பிதழ்களை இருவரும் சேர்ந்து  கொடுக்கவுள்ளதாக மணமகள் கீதா பஸ்ரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் போர்ட்ஸ்மவுத் நகரை சேர்ந்த பஞ்சாப் தம்பதிக்கு பிறந்த கீதா பஸ்ரா, பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்ததையடுத்து மும்பையில் செட்டிலாகி விட்டவர். திருமணத்தில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு