Published:Updated:

ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு!

Vikatan Correspondent
 ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு!
ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு!

ஷஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஆஷஸ் முடிந்ததும் மைக்கேல் கிளார்க் ஓய்வு!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் கிளார்க்கின் மோசமான பார்மும் அவருக்கு எதிராக  ஆஸ்திரேலிய ரசிகர்களையும்,  மீடியாக்களையும் திருப்பி விட்டுள்ளது.  கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்சுகளில் 668 ரன்களைத்தான் எடுத்துள்ளார். இதில் 2 முறை சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் கிளார்க் 23 முறை, 30 ரன்களுக்கும் குறைவாகவே  எடுத்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரானத் தொடரில்தான் கிளார்க் அறிமுகம் ஆனார். கிளார்க் அறிமுகமான இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற,  அப்போது மைக்கேல் கிளார்க் உதவியாக இருந்தார். தற்போது வரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மைக்கேல் கிளார்க்,  8 ஆயிரத்து 628 ரன்களை எடுத்துள்ளார். மைக்கேல் கிளார்க் 28 சதங்களும் , 27 அரைசதங்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் கிளார்க்கிற்கு 4வது இடம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பிறகு மிகச்சிறந்த கேப்டனாக கருதப்பட்ட மைக்கேல் கிளார்க்,  2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்றர். ஆனால் தற்போதைய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான தோல்விகளையடுத்து கிளார்க் மீடியாக்கள், ஆஸ்திரேலிய ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆஷஸ் தொடர் முடிந்த பின் ஓய்வு எடுக்கும் முடிவுக்கு 34 வயது கிளார்க் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிங்ஹாமில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டி முடிந்ததும் பேசிய மைக்கேல் கிளார்க், ''இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதுதான் நான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும். அத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெறவுள்ளது ''என்றார்.