Published:Updated:

மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்!

Vikatan Correspondent
மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்!
மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்!

ங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படு கேவலத்தை சந்தித்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் 331 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் ரோஜர்சும் டேவிட் வார்னரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்!

இரண்டாவது இன்னிங்சில் ரோஜர்ஸ் 52 ரன்னிலும், வார்னர் 64 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆனால்  3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித், வெறும் 5 ரன்னில் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது. உலகின் நம்பர் ஒன் வீரராக ஸ்மித்,  பிராட் வீசிய புல் வைட் பந்தை தொட்டு, மிட்பாயின்ட் திசையில் நின்ற  ஸ்டோக்கிடம் எளிதாக பிடி கொடுத்து வெளியேறினார்.
 

மிஸ்டர் .ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா? கேள்வி கேட்கும் ஷேன் வார்ன்!

ஸ்மித் அவுட்டான விதம், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னை கொதித்து எழ வைத்து விட்டது."மிஸ்டர் ஸ்மித் நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்தானா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இது போன்ற பந்துகளை எந்த வித கேள்வியும் எழாமல் கீப்பரிடம் அனுப்பி விட வேண்டும். உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன், தேவையில்லாத பந்துகளை அடித்து அவுட் ஆவதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று ஷேன் வார்ன் கூறியுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், ஸ்மித் அவுட்டான விதம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி  தொடரை கைப்பற்றி விடும்.