Published:Updated:

லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா!

Vikatan Correspondent
லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா!
லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா!

ந்திய அணி கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே, இந்த தொடருக்கு சுரேஷ் ரெய்னாவைதான் கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர்.

லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா!

ஜிம்பாப்வே செல்லவுள்ள இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக, ஜுன் 29ஆம் இந்திய அணியின் தேர்வுக்குழு கூடியது. அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்தர ஜடேஜா ஆகியோர்,  சூதாட்டத் தரகரான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் 20 கோடி அளவிற்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை லஞ்சமாக பெற்றதாக லலித் மோடி, ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதம் குறித்த தகவல் வெளியாகியிருந்தது.

இந்த செய்தி வெளியானவுடன்தான் பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர்,  இந்திய அணியின் தேர்வுக்குழுவினரிடம், சுரேஷ் ரெய்னாவை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டமென்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். அதே வேளையில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டதாம்.