Published:Updated:

தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை!

தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை!
தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை!

தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர்.

தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை!

தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார்.

இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போனது. எனினும் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் அதாவது 98 போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமை டி வில்லியர்சுக்கு கிடைத்துள்ளது.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 96 போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 94 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளனர். பிரண்டன் மெக்கல்லம் தொடர்ச்சியாக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மேலும் 6 போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால், புதிய சாதனையை நிகழ்த்தி விடுவார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு