Published:Updated:

இந்தியாவின் பாதுகாப்பை விட கிரிக்கெட் முக்கியமில்லை - அனுராக் தாக்கூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியாவின் பாதுகாப்பை விட கிரிக்கெட் முக்கியமில்லை - அனுராக் தாக்கூர்
இந்தியாவின் பாதுகாப்பை விட கிரிக்கெட் முக்கியமில்லை - அனுராக் தாக்கூர்

இந்தியாவின் பாதுகாப்பை விட கிரிக்கெட் முக்கியமில்லை - அனுராக் தாக்கூர்

ந்தியாவின் பாதுகாப்பை விட பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது முக்கியமில்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர்  அனுராக் தாக்கூர்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பை விட கிரிக்கெட் முக்கியமில்லை - அனுராக் தாக்கூர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. இரு நாட்டுக்கும் பொதுவான இடத்தில் 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை நடத்த வேண்டுமென,  தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. இதற்கிடையே  பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூரிடம்  இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் , '' பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் இந்தியாவிடம் பேசி வருகிறது. ஜம்மு, பஞ்சாப் மாநிலங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் தொடர்ந்து உயிரை இழந்து வருகின்றனர்.

ஒரு இந்தியராக இந்த சூழலில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தேவையில்லை என்றே நினைக்கிறேன். எங்கள் தேசம் அமைதியாக இருந்தால்தான் நாங்கள் கிரிக்கெட்டை பற்றி யோசிக்க முடியும். எங்கள் நாட்டு பாதுகாப்பு எங்களுக்கு கிரிக்கெட்டை விட முக்கியம்'' என்றார்.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு