Published:Updated:

''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

Vikatan Correspondent
 ''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை
''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

ன் மகள் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் என்னை உணரவேண்டும். ஒரு தீவிரவாதியாக என்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

 ''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மதியமே நீதிமன்ற வளாகத்துக்க ஸ்ரீசாந்த் வந்து விட்டார். கறுப்பு நிற சட்டை அணிந்து சாந்தமே உருவாக நீதிமன்றத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

மாலையில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்த போது ஸ்ரீசாந்த் மனம் உடைந்து போய் அழத் தொடங்கி விட்டார். முகத்தை கையால் மூடிக்கொண்டு குலு குலுங்கி ஸ்ரீசாந்த் அழுவதை பார்த்த இதே போல குற்றச்சாட்டுக்குள்ளான அங்கித் சவானும், அஜீத் சண்டிலாவும் ஸ்ரீசாந்திடம் வந்து ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.தொடர்ந்து ஸ்ரீசாந்தின் நண்பர்கள் அவருக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

 ''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

தீர்ப்புக்கு பின் ஸ்ரீசாந்த் கூறுகையில்,'' எனக்கு தேவதை பிறந்த நேரத்தில் இந்த நல்ல தீர்ப்பு வந்துள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் என்று கூகுளில் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் சேர்ந்து எனது படமும் வரும். இதனை கண்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எனது மகள் வளரும் போது கூகுளில் என்னை தேடினால் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் அறிய வேண்டும். ஒரு தீவிரவாதியாக என்னை அவள் அறிந்து கொள்ள கூடாது .

தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்து விட்டேன் . பல நேரங்களில் என்னை கிரிக்கெட் மைதானங்களுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். அவமதித்துள்ளனர், அவமானப்படுத்தியுள்ளனர்.  கடந்த 2 வருடங்கள் என் வாழ்க்கையில் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை .இந்திய அணிக்காக மீண்டும் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்கான அனுமதியை பி.சி.சி.ஐ அளிக்க வேண்டும். ''  என்றார்.

 ''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

இந்த தீர்ப்பு வந்த பிறகு பி.சி.சி.ஐ துணைத் தலைவரும் கேரள கிரிக்கெட் சங்கத் தலைவருமான டி. சி.மேத்யூ கூறுகையில், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ.யிடம் வலியுறுத்துவேன் என்றார்.கேரள ரஞ்சி அணியின் பயிற்சியாளர் பாலச்சந்திரன், ஸ்ரீசாந்தை திறந்த மனதுடன் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.