Published:Updated:

நீதிமன்றம் விடுவித்தாலும் ஸ்ரீசாந்த் அண்ட் கோவுக்கு தடை தொடரும் -பிசிசிஐ திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும் பி.சி.சி.ஐ விதித்த தடை தொடரும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றம் விடுவித்தாலும் ஸ்ரீசாந்த் அண்ட் கோவுக்கு தடை தொடரும் -பிசிசிஐ திட்டவட்டம்

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்ற நடைமுறைகள் மீதான நீதிமன்ற தீர்ப்பு பிசிசிஐயின் தனிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை பாதிக்காது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ  எடுத்த ஒழுங்கு நடவடிக்கையில் மாற்றமிருக்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த், சவான் மீதான ஆயுள் தடை இன்னும் சிலகாலம் நீடிக்கும் என்றே இப்போதைக்கு தெரிகிறது. சண்டிலா மீதான ஒழுங்கு கமிட்டி விசாரணை நிலுவையில் உள்ளது.மஹாராஷ்டிர மாநில அரசின் ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவில் இவர்கள் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தக் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டால், எந்தவிதமான சந்தேகத்துக்குமிடமின்றி குற்றங்களை நிரூபிக்கும் சாட்சியங்கள் தேவை, இதனை டெல்லி போலீஸ் செய்ய தவறிவிட்டதாலேயே விசாரணை நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு