மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. 

போதும்... போறேன்...!

தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர் மாதம்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். அறுவை சிகிச்சை வெற்றி பெற பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை போட்டியின் போதே கிறிஸ் கெயில் முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இதனால் யு.ஏ.இ அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் வலியை குறைக்கும் ஊசி போட்டுக் கொண்டுதான் விளையாடினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு