Published:Updated:

405 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லண்டன்:ஆஷஸ் தொடரின் 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

405 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 566 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 215 ரன்களும் ரோஜர்ஸ் 173 ரன்களும் அடித்து சாதனை படைத்தனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களையே எடுத்தது. அலெஸ்டர் குக் 96 ரன்களும் பென்ஸ் ஸ்டோக்ஸ் 87 ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில்,103 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்று சமன் அடைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு