Published:Updated:

தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ)

தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ)
தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ)

தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலில் அலை சறுக்குப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரரும், உலக சாம்பியனுமான மிக் ஃபானிங் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா  தாக்கியதால் சுதாரித்துக் கொண்ட அவர், எதிர் தாக்குதல் நடத்தி அதனை விரட்டி அடித்துள்ளார். இந்த தில்லான சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.


               



ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நீர்சறுக்கு வீரர் மிக் ஃபானிங். இவர் நீர் சறுக்கு விளையாட்டில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஃபானிங், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். போர்ட் எலிசபெத் நகரில் ஜெஃப்ரி பே ஓபன் அலை சறுக்குப் போட்டியில் அவர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா ஒன்று அவரை தாக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும் துணிச்சலாக செயல்பட்ட ஃபானிங், சுறாவை எதிர்த்து தாக்க தொடங்கினர். ஃபானிங்கின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சுறா அங்கிருந்து தப்பியது. பின்னர் படகில் வந்த போட்டி அமைப்பாளர்கள் அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஃபானிங்குக்கு சிறிய அளவிலாக காயங்கள் ஏற்பட்டிருந்தன.

இது குறித்து ஃபானிங் கூறுகையில், "நான் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எனது காலில் கட்டியிருந்த கயிறு அறுந்து போனது. இதனால் தண்ணீரில் குதித்தேன். தண்ணீருக்கு அடியில் இருந்து எதுவுவோ எனது காலில் கடித்த உணர்வு ஏற்பட்டது. நான் அதனை எட்டி உதைத்தேன். அது என்னை பற்களால் கடிக்க முயன்றது. அப்போது நான் திருப்பி தாக்கினேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு