Published:Updated:

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!
பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நேற்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

பகலிரவு போட்டியான இதில்,முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களை எடுத்தது. இலங்கை அணி பேட் செய்த போது, இரவு 9.35 மணியளவில் 34 வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது இலங்கை அணி 158 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

இந்த சமயத்தில் ஸ்டேடியத்தின் கிழக்குபகுதியில் இருந்த இரு பிரிவு ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அப்போது மைதானத்திற்குள்ளும் கல் வீசப்பட்டது. இதையடுத்து போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் உடனடியாக ஆட்டத்தை நிறுத்த உத்தரவிட்டார். அதோடு மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களையும் உடனடியாக டிரெஸ்சிங் அறைக்கு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

சுமார் அரை மணி நேரம் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.  வீரர்கள் உடனடியாக டிரெஸ்சிங் அறைக்கு திரும்பி விட்டதால், காயம் அடையாமல் தப்பித்தனர்.  மைதானத்திற்கு வெளியேவும் மோதல் தொடர்ந்தது. இதில் 2 போலீசார் உள்பட 4 பேர் காயமடைந்தனர். மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த  12 வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்ததன.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து இலங்கை ரசிகர்கள் அட்டூழியம்!

ரசிகர்களின் ரகளையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்த பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து 181 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு