Published:Updated:

லோதா கமிட்டியின் தண்டனை விவரத்தை 'குரூப் ஸ்டடி' பண்ணப் போறாங்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை : சூதாட்ட விவகாரத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்து ஆராய தனிக்குழுவை ஏற்படுத்த ஐ.பி.எல். நிர்வாக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லோதா கமிட்டியின் தண்டனை விவரத்தை 'குரூப் ஸ்டடி' பண்ணப் போறாங்கலாம்!

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஐ.பி.எல். நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால், பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் லோதா கமிட்டி அளித்த தண்டனை விவரங்களை குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டது.  இந்த குழு தீர்ப்பு குறித்து ஆராய்ந்து 6 வார காலத்தில் அறிக்கை அளிக்கும்.

பின்னர் கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பி.சி.சி.ஐ,''  லோதா கமிட்டி விதித்துள்ள தண்டனையை முழுவதுமாக அமல்படுத்துவோம். இந்த தீர்ப்பை மதிக்கிறோம். எனினும் அதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய தனிக்குழுவை ஏற்படுத்த உள்ளோம். இந்தக்குழுவை அமைக்கும் அதிகாரம் ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு அளிக்கப்படுகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் '' என்று அதில் கூறியுள்ளது.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு