Published:Updated:

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இயக்குநருமான அலெஸ்டர்  கேம்பெல், தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா புகார் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை!

இது குறித்து  ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் வில்சன் மனசேவுக்கு பிராஸ்பர் உத்சயா கடிதம் எழுதியுள்ளார். அதில் '' ஜிம்பாப்வே அணி வீரர்களில் என்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடக்கிறார். தனிப்பட்ட பகைமை பாராட்டுகிறார். அண்மையில்  நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான் அணியின் முதல் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படாமல் போனதற்கு கேம்பெல்தான் காரணம்.

கடந்த 2010முதல் 2012 ஆம் ஆண்டு வரை அவர், ஜிம்பாப்வே கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்தபோது நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு வசதியாக வெள்ளை இனத்தவர்களையே பயிற்சியாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் நியமித்திருந்தார். ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் சந்தைப்படுத்துதல் விவகாரத்தை கவனிப்பதற்காக  தனக்கு சாதகமான 'டோமினஸ் ஸ்போர்ட் ' நிறுவனத்தை உருவாக்கினார்.

கேம்பெலின் செயல்பாடுகள்தான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் நிதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சந்தித்தது.  சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு கேம்பெல் செயல்பட்டார். அவரால், நான் இன்வெறிக்குப் பலியானவன் என்பதை வேதனையுடன் சொல்லிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு