Published:Updated:

விஜய் மல்லையாவின் கிரிக்கெட் அணி விற்பனைக்கு?

விஜய் மல்லையாவின் கிரிக்கெட் அணி விற்பனைக்கு?
விஜய் மல்லையாவின் கிரிக்கெட் அணி விற்பனைக்கு?

பெங்களூரு ராயல்  சேலஞ்சர்ஸ் அணியை விற்பனை செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜின்டால் ஸ்டீல் வொர்க்ஸ் குழுமம் பெங்களூரு அணியை வாங்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவின் கிரிக்கெட் அணி விற்பனைக்கு?

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடங்கப்பட்ட போது விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவரீஸ் நிறுவனம் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்கியது. ஐ.பி.எல். தொடரில் இந்த அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லையென்றாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ், கெயில் போன்ற நட்சத்திர வீரர்களை உள்ளடக்கியது.

பெங்களூரு அணியை வாங்குவது குறித்து ஜின்டால் குழுமத்தின் தலைவர் சஜன் ஜின்டால் கூறுகையில், இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.இந்த விளையாட்டை புரோமோட் செய்யும் எண்ணம் எங்களுக்கு உள்ளது என்றார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, அது அந்த அணி எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தது என்று பதிலளித்தார்.

இந்திய லீக் கால்பந்து தொடரில் விளையாடும் பெங்களூரு எப்.சி அணி ஜின்டால் குழுமத்துக்கு சொந்தமானதுதான். இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரிதான் இந்த அணிக்கும் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.