Published:Updated:

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!
இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி சிலி அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது உருகுவே அணியின் முன்னணி வீரர் எடிசன் கவானியின் பின்பக்கத்தில் தட்டி அநாகரீகமாக நடந்து கொண்டார் சிலி வீரர் கன்சாலா ஜாரா. இதனால் ஆத்திரமுற்ற எடிசன் கவானி, ஜாராவின் முகத்தில் தாக்க, எடிசன் கவானிக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

தொடர்ந்து லைன்ஸ்மேனிடம் சென்றும் எடிசன் கவானி தகராறில் ஈடுபட்டதால் மேலும் ஒரு மஞ்சள் அட்டை பெற்ற எடிசன் கவானி களத்தை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. இந்த போட்டியில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் எடிசன் கவானியிடம் சிலி வீரர் கன்சாலா ஜாரா நடந்து கொண்ட விதம் குறித்து 'கான்மோபோல்' ஒழுங்கு கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், கவானியிடம் ஜாரா நடந்து கொண்டது விளையாட்டுத் தன்மை இல்லாத செயல். இதனால் அவருக்கு 3 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் 7 லட்ச ருபாய் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

எனினும் களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஜாராவுக்கு சிலி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடிசன் கவானியின் பின்பக்கத்தில் ஜாரா தட்டுவது போன்று தெருக்களில் ஓவியமாக தீட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தடை விதிக்கப்பட்டதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் ஜாரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிலி அணி பெரு அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா- பராகுவே அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு