Published:Updated:

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராமரிப்பில்தான் வளர்த்து வருகிறார்.

தற்போது 5 வயதான ஜுனியர் ரொனால்டோவும் தந்தையை போலவே அபாராமான கால்பந்து திறனை கொண்டிருக்கிறார். நடப்பு சீசன் முடிவடைந்ததும் ரொனால்டோ, பிரான்ஸ் நாட்டிலுள்ள கடற்கரை நகரில் சில நாட்கள் ஓய்வில் இருந்தார். அப்போது அங்கேயே தந்தையர் தினத்தை ஜுனியர் ரொனால்டோவுடன்கொண்டாடினார்.

அந்த சமயத்தில் கடற்கரை ஒன்றில் தந்தையும் மகனும் கால்பந்து விளையாடிய புகைப்படங்களை தற்போது ரொனால்டோ வெளியிட்டுள்ளார்.தந்தையை போலவே பலவிதமான ஷாட்களை அடிக்கும் ஜுனியர் ரொனால்டோவை பார்க்கும் போது புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு