Published:Updated:

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனைக்கு தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்லோவேகியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில், திருச்சியை சேர்ந்த ஜெனிதா ஆண்டோ தங்கம் வென்று அசத்தினார்.

 மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச  செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனைக்கு தங்கம்!

ஸ்லோவேகியா நாட்டில் உள்ள பிரட்டிஸ்வாலா நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டி, கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 11 நாடுகளை சேர்ந்த 40 வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில், திருச்சி வீராங்கனை ஜெனிதா ஆண்டோ பல போட்டிகளில் கிடைத்த வெற்றி புள்ளிகள் அடிப்படையில் தங்கம் வென்றார்.

சர்வதேச அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஜெனிதா ஆண்டோ, நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனிதா ஆன்டோ, ''இந்த தொடரில் 3வது முறையாக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு காரணமாக இருந்த எனது தந்தை இருதயராஜ் மற்றும் போட்டியில் பங்கேற்க நிதியுதவி அளித்த இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த ஜெனிதா ஆண்டோவுக்கு அந்த பகுதியை சேர்ந்த மக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு