Published:Updated:

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!
கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கார்ட்டூன் கதாபாத்திரத்தில் இடம் பெறவுள்ளார்.

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் வெண்கலம் வென்றுள்ள மேரி கோம், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். ஏழ்மை நிலையில் இருந்து குத்துச்சண்டை மீதுள்ள தீராத ஆவலினால் இன்று மிகச்சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

தற்போது இந்திய பெண்களின் 'ரோல்மாடல்' மேரிகோம் என்றாலும் அது மிகையில்லை. பெண்கள் மத்தியில் இவருக்குள்ள பிரபலத்தை பயன்படுத்தி, 'மேரிகோம் ஜுனியர்' என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்க ஸ்கிரீன்ஸ்யுக் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேரிகோமுக்கும் அந்த நிறுவனத்துக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கதாபாத்திரத்தில் 'குத்துச்சண்டை' மேரி கோம்...!

இது குறித்து மேரி கோம் கூறுகையில், "பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த கதாபாத்திரம் உருவாக்கப்படும். நம்பிக்கையும், தைரியமும் உள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்காக எனது பங்களிப்பை அளிக்கவுள்ளேன். குத்துச்சண்டை போன்ற கடுமையான விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகம் குற்றச்சம்பவங்களால் நிறைந்துள்ளது. எனவே பெற்றோர் இப்போதாவது விழித்துக் கொண்டு பெண் குழந்தைகளை குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

'மேரி கோம் ஜுனியர்'  தொடர் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளது. தற்போது 32 வயதான மேரி கோம், கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றவர். ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடிப்பில், இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மேரிகோம்' திரைப்படம் சக்கைப் போடு போட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு