Published:Updated:

விளையாட்டு வீரர்களின் உயிரை பறிக்கும் கார்டியாக் அரஸ்ட்!

விளையாட்டு வீரர்களின் உயிரை பறிக்கும் கார்டியாக் அரஸ்ட்!
விளையாட்டு வீரர்களின் உயிரை பறிக்கும் கார்டியாக் அரஸ்ட்!
விளையாட்டு வீரர்களின் உயிரை பறிக்கும் கார்டியாக் அரஸ்ட்!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த வலை பந்து வீரர், பயிற்சியின் போது மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 35வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த வலை பந்து அணி வீரர்கள் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 19 வயதான மயூரேஷ் பவார் என்ற வீரர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

முதலுதவிக்கு பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயூரேஷ் பவாரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்டியாக் அரெஸ்ட் (இதயம் செயல்படுவது நின்று போவது) காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, மயூரேஷ் பவார் மரணத்திற்க கேரள அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலை மகாராஷ்ட்ராவுக்கு கொண்டு செல்லும் செலவையும் கேரள அரசே ஏற்றுள்ளது.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் கார்டியாக் அரெஸ்ட் என்று கூறப்படும் இதயம் செயலிழக்கும் தன்மையால் தொடர்ந்து உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு பல வீரர்களிடம் இல்லை. விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி உடல் தகுதி பரிசோதனை நடந்தால் மட்டுமே இதுபோன்ற பரிதாப மரணங்களைத் தடுக்க முடியும்.