லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: ஐ.பி.எல்: காலேஜ் கேம்பஸின் ஃபேவரைட் வீரர்கள் யார்..?!

ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.எல்

- சத்யா.பா

எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்குற ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பமாக இருக்கு. சென்னை, ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் களிடம், அவங்களோட ஃபேவரைட் இளம் ஐ.பி.எல் வீரர்கள் பற்றிக் கேட்டோம்.

கேர்ள்ஸோட சாய்ஸ்... யாரு?!

பொண்ணுங்க டீம்ல கேட்க ஆரம்பிச் சதுல இருந்து முடிக்கிற வரைக்கும் அதிகமா உச்சரிக்கப்பட்ட பெயர்... நம்ம சாம் கரண்தாங்க. இங்கிலாந்து வீரரான இவரு தமிழ்நாட்டுப் பொண்ணுங்க மனச ரொம்பவே சம்பாதிச்சிருக்காரு. இவரு சி.எஸ்.கேவுக்கு வந்த அப்புறம்தான் ஃபேன் பேஸ் எக்கச்சக்கமா கூடிப்போயிருக்கு.

‘ஏன் எல்லாருக்கும் அவரையே பிடிச்சிருக்கு கேர்ள்ஸ்?’ - கேட்டோம்.

``செம க்யூட்டா இருப்பாரு, நல்ல பிளேயர், ட்ரீம் பாய், சுட்டிக் குழந்தை, அழகு பையன், கடைக்குட்டி சிங்கம்’'னு அவரை பத்தி வந்த ரெஸ்பான்ஸ் எல்லாம் வேற லெவல். ‘பௌலிங்கா இருந்தாலும் பேட்டிங்கா இருந் தாலும் செம்மையா பண்ணுவாரு. அழகு, டேலன்ட் ரெண்டுலயும் இவரு வேற லெவல். இதை மறக்காம எழுதிடுங்க’னு ரெக்வெஸ்ட்கள் வேற.

நடராஜன் - சாம் கரண்
நடராஜன் - சாம் கரண்

பாய்ஸோட சாய்ஸ்... யாரு?!

கிட்டத்தட்ட 90% பசங்க சொன்ன பேரு... நம்ம சின்னப்பம்பட்டி ஸ்டார் நடராஜன்தான். ஒரு ப்ளேயர் என்பதைத் தாண்டி, ‘நம்ம அண்ணன்’ங்கிற ஃபீல் பசங்ககிட்ட இருக்குறதைப் பார்க்க முடிஞ்சுது. அவங்க சொல்ற காரணங்கள் இங்க...

‘`ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவர். ஹார்டு வொர்க்கிங் ப்ளேயர். எந்தப் பின்புலமும் இல்லாம, தன்னோட உழைப்பால மட்டுமே இந்த உயரத்துக்கு வந்திருக்கார் என்பது எவ்ளோ பெரிய விஷயம். இந்த

யார்க்கர் கிங், நம்ம தமிழ்நாட்டுப் ப்ளேயர் என்பது நமக்கெல்லாம்

எவ்ளோ பெருமை. நம்ம வீட்டுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி, நமக்குத் திறமை இருந்தா நம்மால் மேல வர முடியும்னு எங்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் கொடுத்திருக்கார் நடராஜன்’’

- பசங்க ரொம்ப எமோஷனலா பேசினாங்க.

வாழ்த்துகள் சாம் கரண், நடராஜன்!