Published:Updated:

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு அன்னு தகுதி

மே 17,2011

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு அன்னு தகுதி

அமெரிக்காவின் ஃபோர்ட் பென்னிங்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டிளுக்கு இந்தியாவின் அன்னு ராஜ் சிங் தகுதி பெற்றார். ##~~##

இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றில், 389 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார். உலகக் கோப்பையில் பதக்கம் வெல்வது, அன்னுவுக்கு இதுவே முதல் முறை.

முன்னதாக ரோஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆகிய இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.