Published:Updated:

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

Vikatan Correspondent
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

புதுடெல்லி: சர்வதேச விதிப்படி தேர்தல் நடத்தாத இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நீட்டித்துள்ளது.

சர்வதேச விதிப்படி தேர்தல் நடத்தாத இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கடந்த 2012 டிசம்பரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை செய்தது.

தவிர, "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஆனால், இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தவிர, இந்திய சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிடலாம் என உள்ளது என்பதை தெரிவித்தது. இ

ந்நிலையில்அண்மையில் நடைபெற்ர இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட முடியாது முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்கஸ் ரோஜருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார்.

##~~##
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீடிக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் மல்ஹோத்ரா கூறுகையில், "நமது வீரர்கள் பதக்கம் வெல்லாதது, விளையாட்டு அரங்கில் நமது நாட்டு தேசியக்கொடி பறக்காதது வேதனை அளிக்கிறது. இந்த தடை நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்" என்றார்.