என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

இது விளையாட்டுக் குடும்பம்!

இது விளையாட்டுக் குடும்பம்!

##~##

ரசியல் குடும்பம், இசைக் குடும்பம், கலைக் குடும்பம், கவிதைக் குடும்பம், ராணுவக் குடும்பம், சூப்பர் குடும்பம், ஏன் உப்புமாக் குடும்பம்கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள். விளையாட்டுக் குடும்பம் என்று எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மதுரையில் இருக்கிறது ஒரு விளையாட்டுக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருமே தேசிய, மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் என்பதுதான் ஆச்சர்யமானத் தகவல்.

 மூன்று முறை சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் சாதனை செய்த கிஷோர்குமார், தன் குடும்பம்பற்றிப் பேசத் தொடங்கினார். ''என் அப்பா சந்திரமோகன் பளு தூக்கும் வீரர். தொடர்ந்து மூன்றுமுறை 'மிஸ்டர் மதுரை’ பட்டம் வென்றவர். என் தம்பி கிரண்குமார் மாநில அளவிலான சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கி இருக்கான். என் சித்தப்பா குமார் தேசிய ஹாக்கி அணியில் இருந்தவர். என் தம்பி அஜித்குமார் இப்ப சங்கிலி குண்டு எறியக் கத்துக்கிட்டு இருக்கான். எங்க மாமா பெருமாள் ராமசாமி தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதலுக்கு கோச்சாக இருக்கார். அவர் டெக்காத்லன் (Decathion) வீரரும் கூட. 10 தடகளப் போட்டிகளில் தேசிய அளவில் முதல் பரிசு வாங்கி இருக்கார்.

இது விளையாட்டுக் குடும்பம்!

நான் மாநில அளவில் ஆறு முறை முதல் பரிசும் தேசிய அளவில் இரண்டு முறையும் பரிசு வாங்கி இருக்கேன். என்னோட ரோல் மாடல் என் அப்பாதான். அப்பாவைப் பார்த்து சித்தப்பா, அவருக்கு அடுத்து மாமா, அப்புறம் நான், என் தம்பி எல்லாருமே விளையாட்டுக்கு வந்தோம். முதல்ல எனக்கு விளையாட்டுல விருப்பம் இல்லாமத்தான் இருந்தது. 'நம்ம குடும்பத்துல இருந்துக்கிட்டு எப்படி விளையாட்டுல விருப்பம் இல்லாம இருக்குற?’னு தினமும் கிரவுண்ட்டுக்கு அனுப்பிவெச்சார் அப்பா. முதல்ல வேடிக்கைதான் பார்த்துட்டு இருந்தேன். அப்பாதான் சங்கிலி குண்டு உனக்குச் சரியா இருக்கும்னு கோச்சிங் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக் கத்துக்க ஆரம்பிச்ச நான், இப்போ தேசிய அளவில் ப்ளேயர் ஆகிட்டேன். காமன்வெல்த் போட்டிகளில் மெடல் வாங்கணும்கிறது என்னோட ஆசை. வாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. 'எல்லாரும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கத்துக்கணும். விளையாட்டுலதான் உடம்பும் மனசும் ரிலாக்ஸ் ஆகும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். அவரோட ஊக்கத்தால எங்க குடும்பமே இப்போ விளையாட்டுக் குடும்பம் ஆகிடுச்சு.  

இது விளையாட்டுக் குடும்பம்!
இது விளையாட்டுக் குடும்பம்!

ஒரு விளையாட்டு வீரருக்கு உடல் தகுதியைப் போலவே மனத் தகுதியும் முக்கியம்.  போட்டிகளுக்குப் போகும்போது சந்தோஷமான விஷயங்களை ஞாபகம்வெச்சுக்கச் சொல்வார் அப்பா. அது ஒருவிதமான ஆயத்தப் பயிற்சி. மனசு சந்தோஷமா இருக்கும்போது நாம நினைச்ச மாதிரி அதை ஆட்டுவிக்கலாம். எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு. ஐ.பி.எஸ். ஆகணும். ஊரையே மிரளவைக்கிற ரௌடிகளை மிரளவைக்கணும். அதுக்காகவும் நான் தயாராகிட்டு இருக்கேன். சீக்கிரம் கிஷோர் ஐ.பி.எஸ்-ஐ மீட் பண்ணலாம்!'' நம்பிக்கையாகச் சிரிக்கிறார் கிஷோர்குமார்!

- ரா.ராபின் மார்லர்
படங்கள்: பா.காளிமுத்து