Published:Updated:

`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்

`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்
`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்
`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்

 

திருச்சி மாவட்டம், லால்குடியைச் அடுத்த வழுதியூரைச் சேர்ந்த செளந்தரராஜன் - லில்லி சந்திரா தம்பதியின் மூத்தமகன் ஆரோக்கிய ராஜிவ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து பதக்கம் வென்று சாதனை படைத்துவருகிறார். கடந்த வாரம் கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 4x400மீ கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்று சாதித்துள்ளார். ஆரோக்கிய ராஜிவ். அவர் அம்மா லில்லி சந்திராவைச் சந்தித்தோம்.

``இந்த நிலையில் நாங்கள் இருப்பதற்கு என் மகன்தான் காரணம். இதற்காக அவன்பட்ட கஷ்டம் ஏராளம். அவனுக்கு சின்னவயதில் இருந்து மூச்சுத்திணறல் இருக்கும். மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்ந்தோம். குடியிருந்த குடிசை வீடும் இடிந்துபோச்சு. வீடு கட்ட வசதியில்லாமல் பக்கத்து கிராமமான மணக்காலில் வாடகை வீடு எடுத்துக் குடியிருந்தோம். அவர் தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநராக வேலைபார்த்துக் கொடுத்த பணத்தில் பிள்ளைகளை வளர்த்தோம். பிள்ளைகளும் எங்க கஷ்டத்தை  உணர்ந்து படிச்சாங்க. என் மகனின் திறமையைப் பார்த்து, லால்குடியில் இருக்கும் ராமச்சந்திரன் சார் பயிற்சி கொடுத்தார். அவரோட  பழைய ஷூவைப் போட்டுக்கிட்டு ஓடி பதக்கம் வாங்கியிருக்கிறான். முதலில் கல்லூரி படித்த அவனுக்கு, ஊட்டியில் உள்ள  இந்திய ராணுவத்துக்கான மதாராஸ் ரெஜிமெண்டில் வேலை கிடைத்தது. அடுத்து போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்க ஆரம்பித்தான்.
 

`அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்!'- ஆரோக்கிய ராஜிவ் பற்றி தாய் பெருமிதம்

நடுவில் அவனுடைய காலில் தசை விலகிச் சிரமப்பட்டான். ஓடவே முடியாத நிலை அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டவன், பல போட்டிகள்ல ஜெயிச்சான். ஆனாலும் ஒலிம்பிக்ல அவனால ஜெயிக்க முடியலை. என் பையனுக்கு கல்யாணத்தையும் பண்ணி வைச்சுட்டோம். சின்ன வயசுலேருந்து நிறைய கஷ்டத்தை அனுபவிச்சான். அவன் தலையெடுத்த பிறகுதான் நாங்க நல்ல நிலைமைக்கு வந்தோம். இப்ப இருக்கிற வீடு எல்லாம் அவர் உழைப்புதான்.

இப்போதுகூட ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வாங்கிய கையோடு, ஜப்பானில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள கத்தார் நாட்டிலிருந்து ஜப்பான் போய்விட்டான். அவன் ஊருக்கு வருவான் எனக் காத்திருக்கிறோம். அவன் ஒலிம்பிக்ல தங்கம் வாங்கணும். அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கேன்'' என்றார்