Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

Published:Updated:
டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்
டைம் அவுட்

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி எழுதிய `கேம் சேஞ்சர்’ சுயசரிதைதான், கிரிக்கெட் உலகின் தற்போதைய ஹாட் டாபிக். பிறந்த ஆண்டை மாற்றி எழுதி விட்டார்; பல விஷயங்களைத் திரித்து சொல்லியிருக்கிறார் என, புத்தகம் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள். இதெல்லாம் இருந்தால்தானே சுயசரிதை! ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு அந்நியப்பட்டு வருவதை வருத்தம் தோய்ந்த பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார் அஃப்ரிடி. அதேநேரம், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கலவர பூமியாக மாற்றும் தேசிய ஊடகங்களையும், பிரிவினையை வளர்க்கும் பிரதமர்களையும் ஒரு பிடிபிடித்திருக்கிறார். வாஜ்பாய், மம்தாவை பாராட்டவும் தவறவில்லை. பொதுவாக, கிரிக்கெட்டர்கள் எழுதும் சுயசரிதையில் டிரெஸ்ஸிங் ரூம் களேபரங்கள்தான் வெளிச்சத்துக்கு வரும். `கேம் சேஞ்சர்’ முழுக்க அரசியல் சிக்ஸர்கள்! அஃபரிடி அசத்தல்கள்!

டைம் அவுட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழ்நாடு ஸ்போர்ட்ஸ் நிருபர்கள் சங்கம் (TNSJA), இந்தியா சிமென்ட்ஸ், இணைந்து நடத்திய, 2019-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ், முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.குமார், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீரர் ஆர்.ஞானசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். செஸ் வீரர் டி.குகேஷ், தடகள வீராங்கனை தபிதா இளம் சாதனையாளருக்கான விருதைப் பெற்றனர். இளம் செஸ் வீரர்களை உருவாக்கும் ஆர்.பி.ரமேஷ் சிறந்த பயிற்சியாளராக கெளவிரக்கப்பட்டார். தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியின் ஒட்டுமொத்த வீராங்கனைகளும் வந்து சிறந்த அணிக்கான விருதைப் பெற்றது மகிழ்ச்சியான தருணம். பல பிரிவுகளில் சாதித்து வரும் பத்து இளம் வீரர், வீராங்கனைகளுக்கு 3 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீவன் ஃபிளெமிங், மைக் ஹஸ்ஸி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். வாழ்த்துகள் வீரர்களே!

டைம் அவுட்
டைம் அவுட்

ளிமண்ணில் கால்பதிக்கத் திணறிக்கொண்டிருக்கிறார் ரஃபேல் நடால். சமீபத்தில் நடந்த ரோம் மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸிடம் தோற்று வெளியேறியுள்ளார். கடைசியாகப் பங்கேற்ற 3 களிமண் தரைத் தொடர்களில், ஒன்றில் கூட வெற்றி பெறாமல் ஏமாற்றமளித்திருக்கிறார் க்ளே கிங்! ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனலில் ஜோகோவிச்சிடம் தோற்றவர், இந்த ஆண்டு இன்னும் ஒரு பட்டம் கூட ஜெயிக்கவில்லை. பிரெஞ்சு ஓப்பன் தொடங்கப்போகும்  நிலையில், இத்தனை ஆண்டுகள் ராஜ்ஜியம் நடத்திய களிமண் தரையிலேயே தடுமாறுவதால், ரஃபா ரசிகர்கள் பயங்கர பீதியில் இருக்கின்றனர். மீண்டு வா ரஃபேல்!

டைம் அவுட்

2019 பிஎல் நடந்து கொண்டிருக்கும்போதே, பெண்களுக்கான கிரிக்கெட் டி20 சாலஞ்ச் இரண்டாவது சீசனும் நடந்தது. கடந்த ஆண்டு, ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான  ட்ரயல்பிளேஸர்ஸ் அணியும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் பங்கேற்றன. இந்த முறை, மித்தாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி மூன்றாவது அணியாக சேர்க்கப்பட்டது. ஐபிஎல் தொடரைப் போலவே கடைசி ஓவர் வெற்றி, அதிரடி ரன் குவிப்பு, விக்கெட் வேட்டை என விறுவிறுப்பு குறையாத டி20 சாலஞ்சில், சூப்பர் நோவாஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியனானது. வெலோசிட்டிக்கு எதிரான லீக் போட்டியில் 77* ரன்கள் விளாசிய இளம் வீராங்கனை ஜெமிமா ராட்ரிக்ஸ், சூப்பர் நோவாஸ் அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். 18 வயதேயான இந்த சூப்பர் பேட்ஸ்வுமன், 2019 டி20 சாலஞ்சில் அதிக ரன் குவித்த வீராங்கனை! ராட்ரிக்ஸ் ராக்ஸ்!

டைம் அவுட்

பார்சிலோனாவுக்கும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. கடைசியாக அவர்கள் கோப்பை வென்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அணி மோசம் என்றாலும்கூடப் பரவாயில்லை, மனதைத் தேற்றிக்கொள்ளலாம். தொடர் முழுதும் நன்றாக ஆடுபவர்கள், ஒரு போட்டியில் சொதப்பி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, ரோமா அணியிடம் 3 கோல் முன்னிலையைப் பறிகொடுத்தார்கள். இபோது லிவர்பூல் முறை. முதல் சுற்றில் 3-0 என வென்ற பார்கா, அடுத்த சுற்றில் 4-0 எனத் தோற்று வெளியேற, ‘பூராப் பயலும் நம்ம கூடத்தான்யா கம்பேக் கொடுக்கறான்’ என்று கடுப்பாகி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் கடாலன்கள். பாவம் மெஸ்ஸி!

டைம் அவுட்

பிரீமியர் லீக் சீசனின் 38 போட்டிகளில், 30 போட்டிகளை வென்ற எந்த அணியுமே சாம்பியன் ஆகிவிடும். மொத்த சீசனிலும் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்த அணிகள், பட்டம் வெல்லாமல் இருந்ததில்லை. 90 புள்ளிகளைத் தொட்டுவிட்டாலே கோப்பை அந்த அணிக்குத்தான். இத்தனை ஆண்டுகளாக இதுதான் பிரீமியர் லீக் தொடரின் நிலை. இந்த சீசனில், 30 போட்டிகளில் வென்று, 1 தோல்வியை மட்டும் சந்தித்து, 97 புள்ளிகள் பெற்றது லிவர்பூல். எவ்வளவு பெரிய சாதனை! ஆனாலும், கோப்பை இல்லை என்பதுதான் சோகம். மான்செஸ்டர் சிட்டி அணி, அவர்களை விட 1 புள்ளி கூடுதலாகப் பெற்று சாம்பியனாக, 28 ஆண்டுகளாக கோப்பை இல்லாமல் நொந்துகொண்டிருக்கிறார்கள் ஆன்ஃபீல்ட் விஸ்வாசிகள். இனி என்ன, "next year is our year" கோஷத்தைத் தொடரவேண்டியதுதான்! லிவர்பூல் பரிதாபங்கள்!