Published:Updated:

ஒலிம்பிக் மெடல் வின்னர்களுக்கான தேடல்... `கேலோ இந்தியா’ கற்றதும் பெற்றதும்..!

ஒலிம்பிக் மெடல் வின்னர்களுக்கான தேடல்... `கேலோ இந்தியா’ கற்றதும் பெற்றதும்..!

வெற்றிக்கான முதல் விஷயம் டிவி கவரேஜ். ஹீட்ஸ் உட்பட அனைத்துப் போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உட்பட பிராந்திய சேனல்களில் கூட, நேரலை மட்டுமல்லாது போட்டி முடிந்தபின் நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. ஓப்பன் நேஷனல், இன்டர் ஸ்டேட் தொடர்களுக்குக் கூட இதுபோன்ற மீடியா வெளிச்சம் கிடைத்ததில்லை.

ஒலிம்பிக் மெடல் வின்னர்களுக்கான தேடல்... `கேலோ இந்தியா’ கற்றதும் பெற்றதும்..!

வெற்றிக்கான முதல் விஷயம் டிவி கவரேஜ். ஹீட்ஸ் உட்பட அனைத்துப் போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உட்பட பிராந்திய சேனல்களில் கூட, நேரலை மட்டுமல்லாது போட்டி முடிந்தபின் நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. ஓப்பன் நேஷனல், இன்டர் ஸ்டேட் தொடர்களுக்குக் கூட இதுபோன்ற மீடியா வெளிச்சம் கிடைத்ததில்லை.

Published:Updated:
ஒலிம்பிக் மெடல் வின்னர்களுக்கான தேடல்... `கேலோ இந்தியா’ கற்றதும் பெற்றதும்..!

`ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்ல என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்விக்கு இப்போதுதான் விடை தேடத் தொடங்கியிருக்கிறோம். இதுவே தாமதம்தான். இருந்தாலும், இப்போதாவது ஆரம்பித்தார்களே என்று சந்தோஷப்படலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்தே இளம் வீரர்களை அடையாளம் கண்டு பயிற்றுவிப்பதால்தான், அமெரிக்கா ஒலிம்பிக்கில் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. அந்த வரிசையில் இந்தியா இப்போதுதான் `கிராஸ்ரூட்’ லெவலிலிருந்து பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. 

மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்வர்த்தன் சிங் ரத்தோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். அதனால்தான் அவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரத்தோரின் கனவுத் திட்டமான `கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர் மட்டும் பங்கேற்ற `கேலோ இந்தியா ஸ்கூல் கேம்ஸ்’ டில்லியில் நடந்தது. இந்த ஆண்டு, கல்லூரிகளில் பயில்பவர்களும் பயன்பெறும் வகையில் வயது வரம்பு 21 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப டோர்னமென்ட்டின் பெயரும் `கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ என மாற்றப்பட்டது. புனேவில் 12 நாள்கள் நடந்த இந்தத் தொடரில், நாடு முழுவதுமிருந்து 6,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகம் 27 தங்கம் உட்பட 88 பதக்கங்கள் வென்று 5-வது இடம் பிடித்தது. 227 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது மகாராஷ்டிரா.

பொதுவாக, அத்லெடிக்ஸைப் பொறுத்தவரை இது ஆஃப் சீசன். மார்ச் மாதம் கத்தாரில் ஏசியன் டிராக் அண்ட் ஃபீல்ட் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஃபெடரேஷன் கோப்பையை வீரர்கள் எதிர்நோக்கி இருப்பார்கள். இந்த நேரத்தில் `மீட்’ நடத்தினால் எப்படி என்ற விமர்சனத்துடன்தான் `கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ தொடங்கியது. ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதாகவும் சிலர் குற்றம் தெரிவித்தனர். இதையெல்லாம் மீறி, இந்தத் தொடர் வெற்றிபெற்றிருக்கிறது என்பதே உண்மை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றிக்கான முதல் விஷயம் டிவி கவரேஜ். ஹீட்ஸ் உட்பட அனைத்துப் போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உட்பட பிராந்திய சேனல்களில் கூட, நேரலை மட்டுமல்லாது போட்டி முடிந்தபின் நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. ஓப்பன் நேஷனல், இன்டர் ஸ்டேட் தொடர்களுக்குக் கூட இதுபோன்ற மீடியா வெளிச்சம் கிடைத்ததில்லை. சீனியர் அத்லெட்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, ஜுனியர்களுக்குக் கிடைத்திருப்பது ஒரு ப்ளஸ். 

நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களை சர்வதேச அளவில் ஜொலிக்கும் வீரர்களாக மாற்றுவதே `கேலோ இந்தியா’வின் நோக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஸ்கூல் கேம்ஸில் வென்ற மனு பேக்கர், செளரவ் செளத்ரி போன்றவர்கள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜாம்பவான்களாக உருவெடுத்தனர். ஈட்டி எறிதலில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வரும் நீரஜ் சோப்ரா, இந்தப் பட்டறையிலிருந்து வந்தவர்தான்.

இந்த ஆண்டும் சர்வதேச அளவில் ஜொலிக்கும் சாத்தியமுள்ள பலரை அடையாளம் காண முடிந்தது. தெலங்கானாவைச் சேர்ந்த தனுஷ் ஸ்ரீகாந்த் என்ற 16 வயது இளைஞனுக்குக் காது கேட்காது. ஆனால், அவர் ஜூனியர் உலகக் கோப்பையில் வெண்கலம் வென்ற அர்ஜுன் பபுதாவை வீழ்த்தி தங்கம் வென்றார். முறையான பயிற்சி இருந்தால் தனுஷ் ஸ்ரீகாந்த் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மெஹ்லி கோஷ், டிராப் பிரிவில் தங்கம் தட்டிய ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மகன் மானவாதித்யா ரத்தோர் ஆகியோர் இனி இந்தியாவுக்காக, சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற மாதேஷ், பளு தூக்குதலில் தங்கம் வென்ற ருத்ர மாயன், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முதலிடம் பிடித்த தபிதா, 100 மீட்டர் ஓட்டத்தில் ஜொலித்த நிதின் போன்ற ஸ்டார்கள் கிடைத்துள்ளனர். இதில் மாதேஷ், ருத்ர மாயன் இருவரின் பர்ஃபார்ம் பலரையும் கவனம் ஈர்த்தது. ருத்ர மாயன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவரது அப்பா சொர்ணமுத்து காமன்வெல்த் கேம்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். 280 முதல் 290 கிலோ வரை அநாயாசமாகத் தூக்கும் ருத்ர மாயனுக்கு வயது 16. சதீஷ் சிவலிங்கத்தைப் போல மாயனும், பளுதூக்குதலில் சாதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.  

என்னதான் ஆசிய அளவில் 100 மீ, 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தாலும், ஒலிம்பிக் போன்ற பெரிய தொடர்களில் பதக்கம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், 800 மீட்டர் அப்படி அல்ல. நடேஷ்டா ஸ்டைலை ஒத்திருக்கும் மாதேஷுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி கொடுத்தால், இன்டர்நேஷனல் டோர்னமென்ட்களிலும் அவர் பதக்கம் வெல்வது நிச்சயம்.

போட்டிகளை நடத்தி பதக்கம் கொடுப்பதோடு நிறுத்தி விடாமல், சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல தகுதியுடைய 1,000 வீரர்களைக் கண்டறிந்து, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம், 8 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க `கேலோ இந்தியா’ முடிவெடுத்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தால் (SAI) அங்கீகரிக்கப்பட்ட 54 அகாடமிகளில் தங்கி பயிற்சி பெற்றால் மட்டுமே, இந்த வசதிகள் கிடைக்கும்; அங்கீகரிக்கப்படாத மையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 1.25 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்படும். இதுதவிர, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மெடிக்கல் இன்சூரன்ஸ், 25 ரூபாய் மதிப்பில் விபத்து காப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது பாசிட்டிவான விஷயம் என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு எங்கே பயிற்சி அளிப்பது, யார் பயிற்சியளிப்பது, வீரர்கள் காயமடைந்த நேரத்தில் ஸ்காலர்ஷிப் எந்த அடிப்படையில் கொடுக்கப்படும் என்ற கேள்விகளும் எழுகின்றன. வயதை மாற்றி போட்டிகளில் பங்கேற்பவர்களை எப்படிக் கண்காணிக்கப் போகிறார்கள் என்பதும் மற்றொரு சவாலான விஷயம். 

`கேலோ இந்தியா’ தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால், பெரிதாக விமர்சிக்கத் தேவையில்லை. ஆனால், அடுத்த முறை இந்திய ஸ்கூல் கேம்ஸ் சங்கம், பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்தத் தொடர் இன்னும் அர்த்தமுடையதாக இருக்கும். அத்துடன் இது புதிய, இளம் வீரர்களை அடையாளம் காணும் தொடர் என்பதால், ஏற்கெனவே இந்திய அளவில் சாதித்தவர்களை (உதாரணத்துக்கு மனு பேக்கர்) தவிர்த்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism