Published:Updated:

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

Published:Updated:
ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!
பிரீமியம் ஸ்டோரி
ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!
ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

சர்வதேச அளவிலான தொடர்களில் டிராக் அண்ட் ஃபீல்டில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைப்பது சொற்பம். ஒலிம்பிக் கூட பெரிய தொடர். ஆனால், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே இந்தியர்களுக்கு குதிரைக்கொம்பு. நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் மட்டுமே, இந்தத் தொடரில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர். 100 மீ, 200 மீ,  ரிலே போன்ற பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்வது சிரமம். ஆனால், கொஞ்சம் முயற்சித்தால் 400 மீ, 800 மீ, தடை ஓட்டம், டிரிபிள் ஜம்ப் போன்ற பிரிவுகளில் வாகை சூட வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிரவின் சித்ரவேல், தபிதா நிச்சயம் ஒருநாள் அந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள். 

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரவின் சித்ரவேல்:

தஞ்சாவூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிரவின் சித்ரவேல் (17). கடந்த ஆண்டு யூத் ஒலிம்பிக்கில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்திய அத்லெட்டிக் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். இளம் வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கும் JSW அமைப்பு, பிரவினை தங்கள் அகாடமியில் சேர்த்தது. பிரான்ஸை சேர்ந்த ஆன்டோனி எய்ச் ( Antony Yaich) கண்காணிப்பில் பயிற்சி பெற்றுவரும் பிரவின், ஆறே மாதத்தில் வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 16.51 மீட்டர் தாண்டி, புதிய சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் தோஹாவில் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஏசியன் சாம்பியன்ஷிப் செல்வது பெரிய விஷயமில்லை. ஜூனியர் டிவிஷனில் பங்கேற்க வேண்டிய வயதில் சீனியர் பிரிவில் மிரட்டி வருவதுததான் பிரவின் பியூட்டி.

டிரிபிள் ஜம்ப்பில் உலக சாதனை படைத்த பிரிட்டனைச் சேர்ந்த ஜோனதன் எட்வர்ட்ஸின் ஜம்ப்பை யூ டியூப்பில் பார்த்து, டெக்னிக்கை மெருகேற்றி வரும் பிரவின், `அடுத்த ஆண்டு நடக்கவுள்ள வேர்ல்ட் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் 17 மீட்டருக்கும் மேல் தாண்டி, சாதனை படைப்பார்’ என்பது அவரது பயிற்சியாளர் கணிப்பு. காமன்வெல்த், ஏசியன் கேம்ஸில் சாதித்த 26 வயது அர்பிந்தர் சிங்குக்கு கடும் சவாலாக இருக்கும் பிரவின் இன்னும் டீன் ஏஜைத் தாண்டவில்லை என்பது கூடுதல் ப்ளஸ். மைல்ஸ் டு கோ பிரவின்!

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

தபிதா:

``லாங் ஜம்ப்ல தபிதா இன்டர்நேஷனல் லெவல்லயும் மெடல் வாங்கித் தருவார். உடல், மனசு இரண்டுலயும் தபிதா செம ஃபிட். இந்த வயசுல இந்த ரெக்கார்டு சாத்தியமில்லை.  அதனால்தான் சொல்றேன், தமிழ்நாட்டுல இருந்து ஒலிம்பிக் மெடல் வாங்கித் தந்தவர்ன்ற பெருமையை தபிதா நிறைவேற்றுவார்’’- இது செயின்ட் ஜோசப் அகாடமி பயிற்சியாளர் நாகராஜ் சொன்னது.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்மாக உயர்ப்பித்து வருகிறார் தபிதா. ஆட்டோ ஓட்டுநரின் மகள். ஒருநாள் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது அனைத்து போட்டிகளிலும் பெயர் கொடுத்துள்ளார் தபிதா. `ஆர்வக்கோளாறு’ என எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில், உயரம் தாண்டுதல் தவிர்த்து, பெயர் கொடுத்த அனைத்துப் போட்டிகளிலும் பரிசு வாங்கியிருக்கிறார். இதுதான் தபிதா ஸ்போர்ட்ஸை கரியராக தேர்ந்தெடுத்ததற்கான தொடக்கப்புள்ளி. 

ஒலிம்பிக் தங்கம்... இவர்களால் மின்னும்!

மகளுக்கு தடகளத்தின் மீதிருக்கும் ஆர்வத்தை அறிந்து, செயின்ட் ஜோசப் அகடாமியில் சேர்த்துவிட்டனர் அவரது பெற்றோர். பயிற்சியாளர் நாகராஜ் அவரைச் செதுக்கினார். பள்ளி, ஜுனியர் லெவல், கேலோ இந்தியா போட்டிகளில் மட்டுமே முத்திரை பதித்துக் கொண்டிருந்த தபிதா, இப்போது சர்வதேச அளவிலும் கவனம் ஈர்க்கத் தொடங்கி விட்டார்.

ஹாங்காங்கில் சமீபத்தில் நடந்த ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் தபிதா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். முதல்நாள் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் 13.86 விநாடிகளில் முதலிடம் பிடித்த தபிதா, மறுநாள் நீளம் தாண்டுதலில் 5.86 மீட்டர் தாண்டி, `யார்றா இந்தப் பொண்ணு’ என பிரமிக்கவைத்தார்.

மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கும் தபிதா, `On your mark...’ சொல்லி விசில் அடித்துவிட்டால், அப்படி ஓடுவாராம். அதனால்தான், சக வீராங்கனைகள் அவரை `பைத்தியம்’ என்பார்களாம். ஆனால், அதை ஜஸ்ட் லைக் தட் எனக் கடந்து செல்கிறார் தபிதா. `பரியேறும் பெருமாள்’ படத்தில் `பேய் மாதிரி படிச்சேன்’ என்பார் கல்லூரி முதல்வர். தபிதா பைத்தியம் போல ஓடுகிறார்; தாண்டுகிறார். தபிதாவையும் எல்லோரும் ஒருநாள் திரும்பிப் பார்ப்பார்கள்!

தா.ரமேஷ்