
டக்வொர்த்: ஈ சாலா கப் நம்தே
லூயிஸ்: கலாய்க்காதீங்க ப்ரோ, நாங்க ஜெயிக்கக்கூடாதுன்னு ஒரு கூட்டம் சதி பண்ணுது!
டக்வொர்த்: யார் அந்த கூட்டம்?
லூயிஸ்: வேற யாரு, நாங்களேதான்!
டக்வொர்த்: ஹாஹா... பத்து வருஷமா வெடிக்கலைனா அது வெடிகுண்டு இல்ல ப்ரோ, வெறும் குண்டு!
லூயிஸ்: கலாய்க்குறீங்களா, இனி பார்க்கத்தானே போறீங்க கோலி - டி வில்லியர்ஸ் ஆட்டத்தை...
டக்வொர்த்: போன வருஷமும் இதைத்தானே சொன்னீங்க!
லூயிஸ்: ஆமா, இனி அடுத்த வர்ற எல்லா மேட்சும் ஜெயிப்போம். ஈ சாலா கப் எங்களுக்கே
டக்வொர்த்: அது நடக்காதே...
லூயிஸ்: அப்படின்னா சென்னை தோத்து, மும்பை ஜெயிச்சு, ராஜஸ்தான் தோத்து, பஞ்சாப் ஜெயிச்சு... ப்ளே ஆஃப் வரைக்குமாவது போவோம்!
டக்வொர்த்: அதுவும் நடக்கலைன்னா...
லூயிஸ்: ரெண்டு பாயின்ட் கையில கொடுத்துட்டு பதிலுக்கு ஹார்ட்டை வாங்கிட்டு போயிட்டே இருப்போம்...
டக்வொர்த்: வருத்தமா இல்லைய்யா ப்ரோ...
லூயிஸ்: என்டெர்டெயினர்ஸ்னா அப்படித்தான் ப்ரோ. ஈ சாலா ஹார்ட் நம்தே...
ப.சூரியராஜ்